நேற்று நாமினேஷன் படலம் நடைபெற்றது. அனைவரும் எதிர்பார்த்தது போல ஆரி, அனிதா,சனம் ஆகியோர் இதில் இடம்பெற்றனர். இதேபோல சோம், ஜித்தன் ரமேஷ், நிஷா மற்றும் பாலாஜியும் இந்த பட்டியலில் இடம் பிடித்தார். இதையடுத்து பிக்பாஸ் தான் ஒரு ராஜதந்திரி என்பதை நீண்ட நாட்கள் கழித்து நிரூபித்தார். அதன்படி டாப்பிள் கார்டு ஒன்று வழங்கப்படும் இதை யார் இவர்கள் 7 பேரில் இருந்து கைப்பற்றுகிறார்களோ அவர்கள் நாமினேஷன் பட்டியலில் இருந்து வெளியேறுவர்.
இதை ரொம்ப நேரம் இழுக்க வேணாம் இத்தோட முடிச்சுக்கலாம் என்பது போல நிஷாவை, அனிதா சீண்டி விட்டார். அந்த வலையில் நிஷா விழுக, அனிதா பாஸை கைப்பற்றி சம்யுக்தாவை நாமினேட் செய்து இந்த வாரம் லிஸ்டில் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் கைக்கு கெடைச்ச பாஸை இப்படி அநியாயமா விட்டு கொடுத்துட்டீங்களே, மக்கள் உங்களுக்கு ஓட்டு போடலன்னா என்ன செய்வீங்க? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.