பிக்பாஸ் வீட்டுக்குள் பிக்பாஸ் 5-வது சீசனில் முதல் திருநங்கை போட்டியாளராக கலந்து கொண்டவர் நமீதா மாரிமுத்து.
இவருடைய கதையை கேட்டு பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் சக போட்டியாளர்களும் சரி, வெளியில் இருந்த பார்வையாளர்களும் சரி, அனைவருமே ஒதுக்கி விட்டனர். சிறுவயதில் ஏற்பட்ட பாலுணர்வு மாற்றம், பெற்றோரின் புரிதல் இல்லாமை, வீட்டை விட்டு வெளியேறி பாம்பே - சென்னை என வழிதெரியாமல் வலியுடன் அலைந்தது, மருத்துவமனை வாசம், கடைசியில் கோர்ட்டில் கிடைத்த, தன் விடுதலைக்கான தீர்ப்பு என நமீதா மாரிமுத்துவின் கதை கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத வலி மிகுந்ததாக அனைவரும் கருதினர்.
இந்த நிலையில் அமைந்த மாரிமுத்து பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேறியதாக பிக்பாஸ் அறிவித்திருந்தார். அதையே கமல்ஹாசனும் முன்மொழிந்தார்.
இந்நிலையில் நாடியா சாங், பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து வெளியே சென்றுள்ளார். இதனை அடுத்து பிஹைண்ட்வுட்ஸ்க்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார். இந்த நேர்காணலில் அவரை நோக்கி பல்வேறு கேள்விகளைக் கேட்ட ரவீந்தர், குறிப்பாக நமீதா வெளியேறியதற்கான காரணம் குறித்து கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த நாடியா சாங், “உடல்நிலை காரணமாக இருக்கலாம்!” என்று குறிப்பிட்டார். அதற்கு, “இருக்கலாம் என்பதெல்லாம் வேண்டாம். நாடியா சாங் நேரடியாக பேச வேண்டும் என்று விரும்புகிறேன். நமீதா ஏன் வெளியேறினார்?” என்று ரவீந்தர் கேட்டிருக்கிறார்.
இதற்கு, பதில் சொன்ன நாடியா, “நாடியா நேரடியாக தான் பேசுவார். இந்த இடத்தில் அதை சொல்ல முடியாத சூழ்நிலை. சொல்லவும் கூடாது. ஆனால் ஒரு விஷயம் அவர் மிகவும் இன்ஸ்பிரேஷனாக இருப்பவர். மிகவும் வலிகளைத் தாண்டி வந்த ஒரு பெண்மணி.
அந்த வீட்டில் எனக்கு கனெக்ட் ஆன முதல் நபர் அவர். முதல் வாரத்திலேயே அந்த வீட்டில் இருக்கும் எல்லாரையும் பற்றியும் அவர் வைத்த கணிப்பு சரி என்பதை, அவர் வெளியேறிய பின் உணர்ந்த ஒரு ஆள் நான். தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் வெளியேறி விட்டார்!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.