நான் சுரேஷோட 'சண்டை' போட்டதுக்கு இதுதான் காரணம்... வெளிப்படையாக பேசிய அனிதா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று அடுத்த வார கேப்டனை தேர்வு செய்வதற்கான டாஸ்க் நடந்தது. டான்ஸ் ஜோடியில் நன்றாக ஆடியவர்கள் யார் என சக போட்டியாளர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் வேல்முருகன், கேப்ரியலா, ரியோ மூவரும் தேர்வாகினர்.

வாக்கெடுப்பு முடிந்தவுடன் அனிதா-சோம் இடையில் சண்டை நடந்தது. வாக்கெடுப்பின் போது சோமுக்கு அனிதா ஆதரவு அளிக்கவில்லை என்ற அடிப்படையில் இது நிகழ்ந்தது. பிரண்ட் ஆக இருந்தும் அனிதா தனக்கு கைதூக்கவில்லை என சோம் காண்டானார். தொடர்ந்து இருவரும் காரசாரமாக மோதி ஒரு முடிவுக்கு வந்தனர்.

அப்போது சுரேஷிடம் தான் சண்டை போட்டதன் காரணத்தை அனிதா தெரிவித்தார். மாற்றி,மாற்றி பேசுகிறேன் என சுரேஷ் சொன்னதால் தான் அவரிடம் சண்டை போட்டதாக அனிதா கூறினார். சோம், அனிதாவை மாற்றி, மாற்றி பேசுவதாக சொல்லி பின்னர் அதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டபோது இது குறித்து அனிதா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய இணைப்புகள்

Why i put up a fight with Suresh? Anitha explained

People looking for online information on Suresh Chakravarthy will find this news story useful.