ஆரியுடன் சில பல சண்டைகள், கேப்ரியலாவுடன் பஞ்சாயத்து சனம், அனிதாவுடன் பிரச்சினைகளை அலசி ஆராய்வது, சம்யுக்தாவை பிரச்சினையில் இருந்து காப்பாற்றுவது என பாலாஜி பிக்பாஸ் வீட்டில் ஒரே பிஸியாக இருக்கிறார். இதனால் அவர் ஷிவானியுடன் பேசும் காட்சிகள் சில நாட்களாக பெரிதாக இல்லை. எல்லோரும் கண்டெண்ட் கொடுத்ததில் பிக்பாஸ் இவர்களை கண்டுகொள்ளவில்லை போல.

இந்த நிலையில் நேற்று திடீரென பாத்ரூமில் சென்று ஷிவானியிடம், பாலாஜி நான் ரொம்ப பிஸி என்பதுபோல விளக்கம் அளித்தார். இதைப்பார்த்த ஷிவானி நீங்க பிஸியா இருந்தா எனக்கென்ன என்பது போல கேள்வி கேட்டு கடைசியில் பாலாஜியை மிகவும் தாழ்மையான குரலில் மன்னிப்பும் கேட்க வைத்தார். ஆனால் இதற்கு என்ன காரணம் என்பது சரியாக தெரியவில்லை.
எனினும் இதை அலசி ஆராய்ந்த ரசிகர்கள் ஒருவேளை பாலாஜி கையில இருக்க டாட்டூவ அர்ச்சனா போட்டு குடுத்ததால ரெண்டு பேருக்கும் சண்டை வந்திருக்குமோ? என தீவிர விவாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர். வேறு சிலரோ சனம், கேப்ரியலா இவர்களிடம் பேசும்போது சவுண்டு விடும் பாலாஜி, ஷிவானியிடம் ஏன் பம்மி பேசுகிறார்? என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் கேப்ரியலாவின் செயலை விமர்சிக்கும் பாலாஜி, கடைசியாக ஷிவானியை எப்போது நாமினேட் செய்தார்? எனவும் கேட்டு வருகின்றனர்.