சோம்பேறி என்ற வார்த்தையை என மீண்டும் ஆரியிடம், பாலாஜி ஒரு விளக்கம் கேட்க எப்பா சாமி முடில என ரசிகர்கள் கதற ஆரம்பித்து விட்டனர். பிக்பாஸ் வீட்டில் நேற்று கார்டன் ஏரியாவில் அமர்ந்திருந்த ஆரியிடம், அமைதியாக வந்த பாலாஜி தன்னுடைய பிரச்சினை குறித்து பேச ஆரம்பித்தார். எனினும் இது மற்றொரு சண்டைக்கே வழிவகுத்தது.
சோம், ஷிவானி, கேப்ரியலா ஆகியோர் சுற்றி நின்றி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர். ஒருகட்டத்தில் பாலாஜி, ஷிவானி எடத்துல உங்க பொண்ணு இருந்தா அப்படித்தான் பேசுவீங்களா? என ஷிவானியை இழுத்தார். பதிலுக்கு ஆரி நான் அப்பவே அதற்கு ஸாரி கேட்டுட்டேன். நீ தான் மறுபடி, மறுபடி அவங்களை இழுக்குற என சரியான பாயிண்டை பிடித்தார்.
என்றாலும் கூட பாலாஜி இந்த விஷயத்தை வெவ்வேறு அர்த்தங்களில் பேசினார். ஆரி சொன்ன பதில்கள் அவர் எதிர்பார்த்தபடி அமையவில்லை போல. என்றாலும் கூட நாமினேஷன் முடிந்த பிறகு மீண்டும் ஆரியிடம் சென்று பாலாஜி மன்னிப்பு கேட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் எத்தனை தடவ தான் ஸாரி கேட்பாரு என பாலாஜியை கிண்டலடித்து வருகின்றனர்.
மேலும் ஆரி பொண்ண வச்சு பாலாஜி பேசுறது நல்லா இல்ல என்றும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மறுபடியும் மொதல்ல இருந்தா?