BiggBoss Ultimate Tamil: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி நிறைவடைந்தது. இந்த ஐந்து சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் வகையில் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ் ஒடிடி
இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். முன்னதாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் பிக்பாஸ் ஓடிடி குறித்து நடிகர் கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். அதன்படி இந்த நிகழ்ச்சிக்கு பிக்பாஸ் அல்டிமேட் என்று பெயர் சூட்டப்பட்டது.
போட்டியாளர்கள்
இதில் முந்தைய சீசன் போட்டியாளர்கள், அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நடந்து முடிந்த ஐந்து சீசன் போட்டியாளர்களில் இருந்து சில போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்டிருந்தார். அதன்படி தற்போது பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக வனிதா, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத், சுஜா வருணி, ஷாரிக் ஹசன், சினேகன், சுருதி, அபினய், தாமரை செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
காபி பொடி பிரச்சனை
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் டாஸ்க்கில் வனிதா விஜயகுமார் தன் டீம் ஜெயித்ததாகவும், அதானால் காபி பொடி கிடைத்துள்ளதாகவும் கூறி, அந்த காபி பொடியை தன் இருப்பிடத்தில் சென்று வைத்துக்கொள்ள முயற்சித்தார். ஆனால், அந்த காபி பொடி கிடைத்ததற்கு தாங்களும் விளையாண்டதுதான் காரணம் என அபிராமி வனிதாவுடன் சண்டை போட்டார். இவர்களுக்குள் நடந்த இந்த வாக்கு வாதத்தை அடுத்து, தனக்கு காபியே வேண்டாம் என்று காபி டப்பாவை தூக்கிப் போட்டுவிட்டு வனிதா சென்று விட்டார்.
பிரச்சனை ஆக்குகிறீங்களா பிக்பாஸ்?
அதன் பிறகு பிக்பாஸை நோக்கி உங்களுக்கு பிரச்சனை கிடைக்கவில்லை என்பதால் இப்படி இந்த பிரச்சனையை பிரச்சனை ஆக்குகிறீங்களா பிக்பாஸ்? எனக்கு தலை வலிக்கிறது என்று குறிப்பிட்டி பேசியிருந்தார்.
இந்த ஆடியோ தற்போது டிஸ்னி + ஹாட்ஸ்டார் ட்விட்டர் தளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் வனிதா அக்காவுக்கு அந்த காபியை கொடுங்கப்பா.. ஏன் இப்படி செய்கிறீர்கள், அவர் வெளியே போனால் சுவாரஸ்யம் இருக்காது என்று கமெண்டுகள் கொடுத்து வருகின்றனர்.