பிரபல திரைக்கதாசிரியர், எழுத்தாளார் சுஜாதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகினால் அதில் யார் நடிப்பது என்பது குறித்து, அவரது மனைவி சுஜாதா ரங்கராஜன் பதிலளித்துள்ளார்.
தமிழில் சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் முத்திரை பதித்தவர் எழுத்தாளர் சுஜாதா. இது தவிர மின்னணு வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்கியதில் இவரது பங்கு அதிகம்.
சுஜாதா எழுதிய கதைகள் ‘காயத்ரி’, ‘கரையெல்லாம் செண்பகப்பூ’, ‘ப்ரியா’, ‘விக்ரம்’, ‘வானம் வசப்படும்’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய திரைப்படங்களாக வெளியாகின. இது தவிர ‘ரோஜா’, ‘இந்தியன்’, ‘ஆய்த எழுத்து’, ‘அந்நியன்’, ‘பாய்ஸ்’, ‘முதல்வன்’, ‘விசில்’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘சிவாஜி’, ‘வரலாறு’, ‘செல்லமே’. ‘எந்திரன்’ போன்ற திரைப்படங்களில் திரைக்கதாசிரியராக பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், மறைந்த எழுத்தாளர் சுஜாதா குறித்து பலரும் அறியாத அவரது வாழ்க்கை பயணம் பற்றி அவரது மனைவி சுஜாதா ரங்கராஜன் Behindwoods-ன் பிரத்யேக பேட்டியில் பகிர்ந்துக் கொண்டுள்ளார். அவர் பேசுகையில், சுஜாதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்தால் அதில் யார் நடிக்கலாம் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், அப்படி ஒரு படம் உருவானால் அதில் அதில சுவாரஸ்யமே இருக்காது. அவருக்கு எழுதுவதும் மிகவும் பிடிக்கும். அது அவருடைய கற்பனை உலகம். அதைத்தவிர அவரது வாழ்க்கை பற்றி சுவாரஸ்யமான விஷயங்கள் ஏதும் இல்லை. அவர் மிகவும் எளிமையான நபர் என கூறினார்.
இயக்குநர்நள் மணிரத்னம், ஷங்கர் ஆகியோரின் பல வெற்றிப்படங்களில் பணியாற்றிய சுஜாதா மறைவுக்கு முன் பணியாற்றிய திரைப்படம் ‘எந்திரன்’. அப்படத்தில் வெறும் 30 சீன்களுக்கு மட்டுமே வசனம் எழுதிய சுஜாதா, அதில் ஐஸ்வர்யா ராயை கடித்த கொசுவுக்கு தனது நண்பர்கள் தன்னை அழைக்கும் ரஷ்ய பெயரான ரங்கூஸ்கி என்பதை வைத்தார் என்ற உண்மையை பகிர்ந்துக் கொண்டார்.
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது, சாப்பிட முடியாமல் வறுத்தப்பட்டபோது, வாழ்க்கையே வெறுத்துவிட்டதாக கூறியது மனதிர்கு கஷ்டமாக இருந்தது என சுஜாதா ரங்கராஜன் பகிர்ந்துக் கொண்டார்.