VIDEO: பாகுபலி பிரபாஸ் - பூஜா ஹெக்டே நடிக்கும் PAN INDIA ராதே ஷியாம் படத்தின் நேர்த்தியான டீசர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் பிரபாஸின் பிறந்த நாளான இன்று, அவரது அடுத்த படமான யூவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் ராதா கிருஷ்ணகுமார் இயக்கும் ராதே ஷியாமின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் பிரபாஸின் கதாபாத்திரமான விக்ரம் ஆதித்யா குறித்த சிறப்பு டீசராக இது அமைந்துள்ளது. ராதே ஷியாம் திரைப்படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை இதுவரை உருவாக்கியிருந்த நிலையில், பிரபாஸின் பிறந்தநாள் பரிசாக இன்று வெளியிடப்பட்டுள்ள டீசர் அவர்களை பரவசத்தில் ஆழ்த்துகிறது.

விடுகதை பாணியில் அமைந்துள்ள இந்த டீசர், பிரபாஸ் ஏற்றுள்ள கதாபாத்திரமான கைரேகை நிபுணர் குறித்த ரகசியங்களை தனக்கே உரிய பாணியில் விறுவிறுப்பான முறையில் வெளியிடுகிறது. முதல் முறையாக இத்தகைய வேடத்தில் பிரபாஸ்  நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் பிரபாஸின் கதாபாத்திரம் பிரத்யேகமானது என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. மேலும், வேறு எந்த நடிகரும் சமீப வருடங்களில் கைரேகை நிபுணர் வேடத்தில் நடித்திருப்பதாக தெரியவில்லை. 

ராதே ஷியாம் படத்திலிருந்து பிரபாஸின் சிறப்பு போஸ்டர் ஒன்று சில தினங்களுக்கு முன்பு வெளியாகி வைரல் ஆனது நினைவிருக்கலாம். பல வருடங்களுக்கு பிறகு பிரபாஸ்  காதல் கதையில் நடிப்பதைக் காண அவரது ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். முதன்முறையாக பூஜா ஹெக்டேவுடன் ஜோடி சேர்வதால் இந்த கூட்டணியை திரையில் காண ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர். இவர்கள் இருவரின் சிறப்பு போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளன்றும் ஒரு சிறப்பு போஸ்டர் வெளியிடப்பட்டது.



ஜனவரி 14, 2022 பொங்கல் திருநாளை முன்னிட்டு பிரமாண்டமான முறையில் திரையரங்குகளில் வெளியாகிறது ராதே ஷியாம். பன்மொழிப் படமான ராதே ஷியாமை ராதா கிருஷ்ணகுமார் இயக்க யூவி கிரியேஷன்ஸ் நிறுவனத்திற்காக வம்சி மற்றும் பிரமோத் தயாரித்துள்ளனர்.

VIDEO: பாகுபலி பிரபாஸ் - பூஜா ஹெக்டே நடிக்கும் PAN INDIA ராதே ஷியாம் படத்தின் நேர்த்தியான டீசர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Who Vikram Aditya is! Prabhas's Radhe Shyam character decoded!

People looking for online information on Pooja Hegde, Prabhas will find this news story useful.