தளபதி விஜய் நடித்து வரும் தளபதி 65வது படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். ஜானி மாஸ்டர் நடனம் அமைக்கிறார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், நயன்தாரா‘கோலமாவு கோகிலா’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி அண்மையில் வெளியான ‘டாக்டர்’ திரைப்படம் ஹிட் அடித்தது. இந்நிலையில் நெல்சன் திலீப்குமார், தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
‘மாஸ்டர்’ படத்தைத் தொடர்ந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெஜ்டே நடிக்கிறார். இவர்களுடன் யோகிபாபு மற்றும் ‘டாக்டர்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த கிங்க்ஸ்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் அண்மையில் பீஸ்ட் படத்தின் 100வது நாள் ஷூட்டிங் புகைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் பதிவிட, அதில், தளபதி விஜய் டிரம்ஸ் வாசிக்கும் மாஸ் போஸ் ஒருபுறம் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. இன்னொருபுறம் நடிகர் கிங்க்ஸ்லி தமது அருகில் இருக்கும் ஒரு நடிகையை இசைக்கருவியை வாசித்துக்கொண்டே, பார்த்துக்கொண்டிருக்கும் விஷயமும் வைரலானது.
இதனைத் தொடர்ந்து அந்த நடிகை யார்? என்கிற பேச்சு ரசிகர்களிடையே தொடங்கியுள்ளது. இந்நிலையில் அந்த நடிகைதான் அபர்ணா தாஸ் என்பதும், கேரளாவைச் சேர்ந்த மாடலும் நடிகையுமான அபர்ணா தாஸ்க்கு தமிழில் இதுதான் அறிமுகப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பீஸ்ட் படத்தில் அபர்ணா தாஸூம் முக்கிய முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிகிறது.