நேற்று பிக்பாஸ் வீட்டில் பாலாஜி-சனம் இடையே செம சண்டை நடந்தது. பிக்பாஸ் வீட்டில் தத்துவ வார்த்தைகளை அவ்வப்போது உதிர்க்கும் பாலாஜி நேற்று சனத்தை தறுதலை என திட்டினார். அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என பின்னர் அனிதாவிடம் கேட்டு தெரிந்து கொண்ட சனம் நீங்க எப்படி என்ன அப்படி சொல்லலாம்? என சண்டைக்கு அடிபோட்டார்.
உடனே பாலாஜியும் வெகுண்டெழுந்து வர அனிதா, ஆரி, சம்யுக்தா என இந்த பஞ்சாயத்தை தடுக்க பல பேர் முயற்சி செய்து தோல்வி அடைந்தனர். தொடர்ந்து இருவரும் முட்டிக்கொண்ட போது மரியாதை இல்லாமல் என்னை பேசுகிறார் என பாலாஜி புகார் வாசித்தார். இடையில் சமாதானம் செய்ய வந்த ஆரியையும் அவர் விட்டு வைக்கவில்லை. கடைசியாக இந்த பஞ்சாயத்து ஒருவழியாக முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் அந்த சண்டையின் போது பாலாஜியை மரியாதையாக வாங்க போங்க என சனம் சொன்னதை சுட்டிக்காட்டி ரசிகர்கள் தற்போது வீடியோ பகிர்ந்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது. இன்று காலை வெளியான ப்ரோமோ வீடியோ டெலிட் செய்யப்பட்டதை அடுத்து பாலாஜிக்கு எதிராகவும், ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னைக்கு எண்டெர்டெயின்மெண்ட் இருக்கு!