4 வயசுல குட்டிப்பையன்... யாருப்பா இந்த 'சம்யுக்தா' கார்த்திக்?... எகிறிய எதிர்பார்ப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று இனிதே தொடங்கி உள்ளது. மொத்தம் 16 போட்டியாளர்கள் உள்ளே சென்றுள்ளனர். இந்தமுறை இளமைப்பட்டாளம் அதிகம் என்பதால் ரசிகர்கள் ஆர்மி தொடங்க தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். போட்டியாளர்கள் குறித்து ஏற்கனவே சமூக வலைதளங்களில் ஒரு பட்டியல் வெளியானது.

ஜெராக்ஸ் எடுத்ததுபோல கிட்டத்தட்ட அதில் உள்ளவர்களே வீட்டுக்குள் சென்றுள்ளனர். அதே நேரம் ரசிகர்கள் எதிர்பாராத வகையில் சோமசேகர், சம்யுக்தா கார்த்திக் என இருவர் பிக்பாஸ் வீட்டில் இடம்பிடித்து இருக்கின்றனர். இதில் சோமசேகர் மாடல் என்பதையும் தற்காப்பு கலை வல்லுநர் என்பதையும் நேற்றே நாம் பார்த்து விட்டோம். அதனால் சம்யுக்தா கார்த்திக்(36) குறித்து இங்கே பார்க்கலாம். மிஸ் சென்னை பட்டம் வென்றுள்ள சம்யுக்தா, அடிப்படையில் ஒரு சிவில் என்ஜினீயர்.

சில ஆண்டுகள் கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர் நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் மாடலிங் துறையில் நுழைந்திருக்கிறார். ராதிகா சரத்குமாரின் நடிப்பில் சன் டிவியில் வெளியான சந்திரகுமாரி சீரியலில் இளவரசி ருத்ராவாக நடித்துள்ளார். இதேபோல கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான OOLU என்னும் படத்திலும் நடித்திருக்கிறார். நடிகை, மாடல், தொழிலதிபர், டான்ஸர் என பலமுகங்கள் கொண்டிருக்கும் சம்யுக்தாவிற்கு 4 வயதில் ரயான் என்னும் மகன் இருக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது. 

Who is Samyuktha karthik? Here are some details about her

People looking for online information on Samyuktha Karthik will find this news story useful.