ஒருவழியாக நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய திருமண செய்தியை அறிவித்து விட்டார். முதலில் சூசகமாக பகிர்ந்த அவர் இன்று வெளிப்படையாக தான் யாரை மணக்க போகிறேன் என்பதை ரசிகர்கள் மத்தியில் பகிர்ந்து கொண்டுள்ளார். காஜலின் திருமண செய்தியை கேட்ட ரசிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து அவரை வாழ்த்தி வருகின்றனர்.

அதே நேரம் அவர் கரம்பிடிக்க போகும் தொழிலதிபர் கவுதம் கிச்சுலு குறித்தும் ரசிகர்கள் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர் குறித்து இங்கே நாம் பார்க்கலாம். மும்பையில் இருக்கும் தி கதீட்ரல் அண்ட் ஜான் கனன் பள்ளியில் படித்தவர் கவுதம். பின்னர் அமெரிக்காவில் இருக்கும் டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்தார். அவர் டிசர்ன் லிவிங் (Discern Living) என்கிற நிறுவனத்தை 2015-ம் ஆண்டு துவங்கி நடத்தி வருகிறார். அந்த நிறுவனம் இன்டீரியர் டிசைனிங் மற்றும் வீடுகளை அலங்காரம் செய்யும் வேலைகளை செய்து வருகிறது.
சொந்தமாக தொழில் தொடங்குவதற்கு முன்பு 2011-ம் ஆண்டு பாப் பர்னிஷ் நிறுவனத்தின் இணை நிறுவனராகவும், 2012-ம் ஆண்டு தி எலிபண்ட் என்னும் நிறுவனத்தை அமைப்பதற்கும் உதவி செய்துள்ளார். சாப்பாட்டு பிரியரான கவுதமுக்கு ஃபிட்னஸில் ஆர்வம் அதிகம். மாரத்தான் என்றால் மிகவும் இஷ்டமாம். மும்பையில் நடைபெற்று வரும் மாரத்தான் போட்டியில் தொடர்ந்து பல வருடங்களாக கலந்து கொண்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் தன்னுடைய வேலை தொடர்பான புகைப்படங்களை அடிக்கடி பகிரும் கவுதம் பெர்சனலாக வேறு எந்த விஷயத்தையும் பெரிதாக பகிர்ந்து கொள்ளவில்லை.
இன்று காஜல் இவர் தான் தன்னுடைய வருங்கால கணவர் என்று அறிவித்த பின்னர் கவுதமின் இன்ஸ்டா ஐடியை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுமார் 15 ஆயிரமாக இருந்த அவரது பாலோயர்களின் எண்ணிக்கை தற்போது 19 ஆயிரத்தை கடந்து விட்டது. எனினும் இதுவரை தன்னுடைய திருமணம் குறித்த எந்தவொரு அறிவிப்பையும் அவர் இதுவரை பகிர்ந்து கொள்ளவில்லை. சும்மா ஒரு போஸ்ட் போடலாமே பாஸ் என ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ரசிகர்களின் கோரிக்கை நிறைவேறுமா? என்பதை காத்திருந்து பார்க்கலாம்!