ஆர்யா நடிப்பில் அமேசான் பிரைமில் இன்று (22.07.2021) வெளியாகியுள்ள 'சார்பட்டா பரம்பரை' படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த படத்தை பா.இரஞ்சித் தயாரித்து இயக்கியுள்ளார், முரளி ஜி ஓளிப்பதிவு செய்துள்ளார், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

கபிலன், டான்சிங் ரோஸ், வேம்புலி, மாரியம்மா, லெட்சுமி, ரங்கன் வாத்தியார், கெவின் டாடி உள்ளிட்ட பல கதாபாத்திரங்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகிறார்கள்.
இதில் டான்சிங் ரோசாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருப்பவர் ஷபீர் கல்லரக்கல்.
அவரது நடனமாடிக்கொண்டே பாக்சிங் விளையாடும் ஸ்டைல் மற்றும் அவரின் கால் அசைவுகளுடன் கூடிய உடல்மொழி ஆகியன, அந்த டான்சிங் ரோஸ் கதாபத்திரத்திற்கு உயிர் ஊட்டியுள்ளன.
நடிகர் ஷபீர், தியேட்டர் ஆர்டிஸ்ட் என்று சொல்லப்படும் நாடக கலைஞர் ஆவார். இவர் ஏற்கனவே நெருங்கிவா முத்தமிடாதே, அடங்கமறு மற்றும் சூப்பர் ஸ்டாருடன் பேட்ட உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.பேட்ட படத்தில் விஜய் சேதுபதியின் தம்பியாக, நவாசுதின் சித்திக்கின் மகனாக வருவார் என்பது குறிப்பிடத்தக்கது. பேட்ட படத்திற்கும் சர்பட்டா பரம்பரை படத்திற்கும் இடையே இவ்வளவு உருமாற்றமா என ரசிகர்கள் வியந்து நடிகர் ஷபீரை பராட்டி வருகின்றனர்