OFFICIAL: ப்ளூ சட்டை மாறனின் 'ஆன்டி இந்தியன்' படத்தின் ரிலீஸ் தேதி எது தெரியுமா? பிரபலமான தேதியா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சினிமா விமர்சனங்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் Blue சட்டை மாறன்.

Advertising
>
Advertising

இவரின் பாமரத்தனமான விமர்சனங்கள் சினிமா சம்பந்தபட்டவர்களை கோபமடைய வைத்தாலும், ரசிகர்களின் ஆதரவு கனிசமாக இவருக்கு உண்டு. இந்த ப்ளூ சட்டை மாறன் இயக்கியுள்ள திரைப்படம் ஆன்டி இண்டியன். இது இவருக்கு முதல் திரைப்படமாகும். ஆதம் பாவா இந்த படத்தை Moon பிக்சர்ஸ் சார்பாக தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தை டிசம்பரில் வெளியிடுவதாக படக்குழு முன்னர் அறிவித்தது. ஆனால் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் இந்த படம் வருகிற டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 6 பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் என்பதும் இந்த படம் மத அரசியல் பற்றிய படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்சார் போர்டால் தடைவிதிக்கப்பட்டு, பிறகு பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டது. இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் போஸ்டர்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் ‘ஆடுகளம்’ நரேன்,  ‘வழக்கு எண்’ முத்துராமன், ராதாரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

When is the release of Blue shirt Maran's anti-Indian film

People looking for online information on Blue Sattai Maran will find this news story useful.