பிரேமம்-க்கு முன்பே பிரபல தமிழ் படத்துல சாய் பல்லவி நடிச்சிருக்காங்களா?!.. VIRAL ஃபோட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2015-ஆம் ஆண்டு நிவின் பாலி, சாய் பல்லவி, அனுப்பமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன், ஆனந்த் நாக் மற்றும் பலர் நடிப்பில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் பிரேமம்.

பட்டையை கிளப்பிய இந்த படம் இளசுகளை காதல் கிறுக்கு பிடிக்க வைத்து அலையவிட்டது என சொல்லலாம். ஜார்ஜின் வாழ்வில் பல்வேறு காலக்கட்டங்களில் நடக்கும் வாழ்க்கை சம்பவங்களில் காதலுக்கான இருப்பும் இழப்பும் படம் முழுவதும் காண்பிக்கப்பட்டிருக்கும்.

அண்மையில் இந்த படத்தின் க்ளைமேக்ஸ் பற்றிய சந்தேகங்களை இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தம் ரசிகர்களுக்கு தமது சமூக வலைதளத்தில் விளக்கியிருந்தார்.

இப்படி பிரேமம் எனும் மலையாள படத்தில் தமிழ் பேசும் மலர் டீச்சராக அறிமுகமான சாய் பல்லவி அடுத்தடுத்து தனுஷின் மாரி -2, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கரு, சூர்யாவின் நடிப்பிலான என்.ஜி.கே உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்தார்.

இப்படி தமிழின் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ள சாய் பல்லவி 2008-ஆம் ஆண்டே தமிழ் சினிமா திரையில் தோன்றியுள்ளார் தெரியுமா?

ஆம், ஜீவா இயக்கத்தில் 2008-ல் ஜெயம் ரவி, கங்கனா ரனாவத் நடித்து வெளியான தாம் தூம் திரைப்படத்தில் கங்கனாவுடன் சில காட்சிகளில் சாய் பல்லவி தோன்றும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

எனினும் தாம் தூம் படத்தை இயக்கும் போது இயக்குநர் ஜீவா காலமானதால், இந்த படம் அனீஷா , மணிகண்டன், பி.சி.ஸ்ரீராம் உள்ளிட்டோரால் எடுத்து முடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் தான் சாய் பல்லவி தோன்றும் புகைப்படங்கள் ட்விட்டரில் வைரலாகி வருகின்றன.

முன்னதாக வெளிநாட்டில் மருத்துவம் பயின்று இங்கு மருத்துவராக நீடிப்பதற்கான தேர்வு ஒன்றை திருச்சியில் எழுத வந்தபோது சாய் பல்லவி ரசிகர்களுடன்  எந்த வித பகட்டும் இல்லாமல் இயல்பாக செல்ஃபி எடுத்துக்கொண்ட போது ட்ரெண்ட் ஆகியியிருந்தார்.

ALSO READ: தன் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு!!.. தகவல் அறிந்ததும் நகைச்சுவை நடிகர் சார்லி அதிரடி நடவடிக்கை!

தொடர்புடைய இணைப்புகள்

Whata woeww sai pallavi acted in dhaam dhoom viral pics

People looking for online information on Dhaam Dhoom, Jayam Ravi, Kangana Ranaut, Sai Pallavi will find this news story useful.