"என்ன 'தல' இப்படி திடீர்னு முடிவு எடுத்துட்டீங்க..?" அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள் ரியாக்சன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இன்று (01.12.2021) நடிகர் அஜித்குமார் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

அதில், இனி என்னை "தல" என அழைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு நடிகர் அஜித்குமார் அன்பான வேண்டுகோளை அறிக்கையாக விடுத்துள்ளார். இதனை நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் "இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ என் இயற்பெயரான அஜித்குமார் மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது. தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களை குறிப்பிட்டு அழைக்க வேண்டாம என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன்". என குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிக்கை வெளியான உடன் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவியது. சமூகவலைதளங்களில் இது குறித்து நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் தங்களது ஆதரவையும், நிலைப்பாட்டையும் தெரிவித்து வருகின்றனர். சில ரசிகர்கள் சிறுவயதில் இருந்தே தல என அழத்துவிட்டதை ஒரே நாளில் மாற்றுவது கடினம் என்றும், சில ரசிகர்கள் அஜித் அவர்களின் முடிவை ஒருமனதாக ஏற்பதாகவும் தெரிவித்து வருகின்றனர். 

இங்கு சில அஜித் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவு செய்த கருத்துக்களை இங்கு காணலாம்.

தல அஜித் நடிப்பில் வலிமை படம் உருவாகி வருகிறது. இந்த படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. படம் பற்றிய அடுத்த அப்டேட்டான அடுத்த சிங்கிள், டிரெய்லர்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இன்று இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது!

தொடர்புடைய இணைப்புகள்

What was the reaction of the fans to Ajith's decision

People looking for online information on Ajith, Ajithkumar, AK, Thala, Valimai will find this news story useful.