தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் நடைபெற்று வருகிறது. சுமார் 70 நாட்களை இந்த நிகழ்ச்சி கடந்துள்ள நிலையில், 10 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கின்றனர்.

Also Read | "சாப்பிடலையா சார்".. இந்தியன் 2 ஷூட்டிங்கில் கமல் குறித்து உதயநிதி நெகிழ்ச்சி!
இனி வரும் நாட்கள் அனைத்து போட்டியாளர்கள் தங்களைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதால், அனைவரும் சிறப்பாக ஆடி வருகின்றனர். இதில், பிரபல சீரியல் நடிகையான ரச்சிதாவும் கலந்து கொண்டுள்ளார்.
ஆரம்பத்தில் இருந்தே தன்னுடைய ஸ்டைலில் ஆடி வரும் ரச்சிதாவுக்கு நிறைய ரசிகர்களும் உள்ளனர். இந்த நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் தனது குடும்பம் குறித்து ரச்சிதா பேசியுள்ள விஷயம், பலரையும் உருக வைத்திருந்தது.
"நான் படிப்புல கொஞ்சம் கம்மி தான். ஜாயிண்ட் ஃபேமிலில இருந்ததுனால அது எங்க அம்மாவுக்கும், அப்பாவுக்கும் நிறைய நெருக்கடியா வந்துச்சு. அதெல்லாம் நான் நல்லா படிக்கணும்னு என் மேல போட்டாங்க. என்னை அடிக்கிறது ஆகட்டும். கழுத்தை நெரித்து நீ செத்துரு செத்துருன்னு என்னை சொல்லி இருக்காங்க. என் அப்பாவும் சரி அம்மாவும் சரி அப்படித்தான் பண்ணாங்க. ஆனா இன்னைக்கு அவங்க ரொம்ப பெருமைப்படுறாங்க அது வேற விஷயம்" என்ன ரச்சிதா கூறினார். இந்த விஷயம் வைரலானதை அடுத்து, இதுபற்றி சிலர் விமர்சிக்கவும் செய்தனர்.
ஆனால் ரச்சிதா முழுமையாக தன் அம்மா பற்றி உருக்கமாக பேசியுள்ளார். அதன்படி தனக்கு அடுத்தடுத்து கிடைத்த சீரியல் வாய்ப்பு குறித்தும், அம்மா இப்போது வரை தன் மீது வைத்த நம்பிக்கை குறித்தும் பல்வேறு உருக்கமான கருத்துக்களை பேசிய ரச்சிதா, தான் உயிர் இருக்கும் வரை அம்மாவை சிறந்த முறையில் பார்த்துக் கொள்வேன்" என தெரிவித்தார்.
அதே போல கடித டாஸ்க்கில் தனது அம்மாவுக்கு கடிதம் எழுதி அதனை படிக்கும் ரச்சிதா, "அந்த கடவுள் கிட்ட கேட்டுக்கிறது ஒண்ணே ஒண்ணு தான். எனக்கு இதுக்கப்புறம் என் வாழ்க்கையில் என்ன நடக்கும்ன்னு சத்தியமா எனக்கு தெரியாது. குழந்தையோட அமைப்பு இருக்கான்னும் எனக்கு தெரியாது. என் அம்மா தான் எனக்கு குழந்தை. அந்த கடவுள் அந்த குழந்தையை என்கூட கடைசி வரைக்கும் கொடுக்கணும். அந்த குழந்தையை நல்லபடியா நான் பாத்துக்கணும். அது மட்டும் நான் கேட்டுக்குறேன்.
என்னோட வாழ்க்கைன்னா அது அம்மா தான். நான் இங்க நிக்கறதுக்கு முழு காரணமும் அவங்க மட்டும் தான். என் திறமைக்கு அவங்க ஆதரவா இருந்தாங்க. கிட்ட இருக்கும் போது அவங்க அருமை புரியல. தெரிய ஆரம்பிக்குறப்போ பிக் பாஸ் வாய்ப்பு வந்துடுச்சு.
இதுக்கப்புறம் எனக்கு நீ, உனக்கு நான்னு வாழுறதுக்கு ரெடியா இருக்கேன் அம்மா" என தாரை தாரையாக கண்ணீர் வடித்தபடி ரச்சிதா பேசுவதை கேட்டு, ஷிவினும் அவரை கட்டியணைத்த படி கண்ணீர் விடுகிறார்.
Also Read | செம.. சன்னி லியோன் & ப்ரியாமணியின் புதிய படத்துக்கு மியூசிக் யாரு பாருங்க..