விஜய் டிவியின் மூலம் பலரும் தமிழக அளவில் மிகப்பெரிய பிரபலமாகி இருக்கின்றனர்.
நிறைய பேர் விஜய் டிவியிலிருந்து திரைப்படத்துறை சென்று வளர்ந்திருக்கின்றனர். இன்னும் பலர் விஜய் டிவியில் இருந்தபடியே பிரபலமாகவும் புகழுடனும் திகழ்கின்றனர். அந்தவகையில் விஜய் டிவி ஆங்கராகவும், திரைப்பட நடிகராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பிரபலமடைந்தவர் மா.கா.பா.ஆனந்த்.
தற்போது, விஜய் டிவியின் மிக முக்கியமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் மா.கா.பா.ஆனந்த் பலருக்கும் உதவி செய்யும் மனப்பான்மை உடையவர் என்று பலரும் பல மேடைகளில் குறிப்பிட்டிருக்கின்றனர்.
குறிப்பாக பிஹைண்ட்வுட்ஸ் டிஜிட்டல் மற்றும் டெலிவிஷன் விருது விழாவின்போது விஜய் டிவி புரோகிராம் ஹெட் பிரதீப் மில்ராய் பீட்டர், “மாகாபா பலருக்கும் உதவி செய்வார். ஆனால் தன்னுடைய உடலை கவனித்துக் கொள்வதில் அக்கறை இல்லாமல் இருக்கிறார்” என்று அக்கறையுடன் குறிப்பிட்டிருந்தார். அந்தளவுக்கு தன்னலம் பாராமல் இருக்கும் மா.கா.பா.ஆனந்த் தற்போது ஒரு முக்கியமான புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.
இதை பார்த்த ரசிகர்களும், அவருடைய சக நண்பர்களும் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். ஆர்ஜே-வாக தன்னுடைய பயணத்தை தொடங்கிய மா.கா.பா விஜய் டிவியில், ‘அது இது எது’ உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் தொடங்கி, இன்று சூப்பர் சிங்கர் வரை பல்வேறு நிகழ்சிகளை தொகுத்து வழங்குகிறார். முக்கியமாக காமெடி ஷோக்களில் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்பார்.
திரைப்படங்களை பொறுத்தவரை, மா.கா.பா.ஆனந்த் பஞ்சுமிட்டாய், வானவராயன் வல்லவராயன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மா.கா.பா. ஆனந்த், தன் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை அண்மையில் தான் இணைய தளத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த புகைப்படங்கள் ட்ரெண்டாகி வந்தன.
இந்த நிலையில்தான் தன்னுடைய விரலில் ஏற்பட்ட முறிவு தொடர்பான ஸ்கேன் பண்ணப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் மா.கா.பா பதிவு செய்திருக்கிறார். இதை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். மா.கா.பாவுக்கு என்ன ஆச்சு? என அவரிடம் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பலரும் கேட்டு வருகின்றனர்.
இதனிடையே இதுகுறித்து மா.கா.பாவின் இன்ஸ்டாகிராமில், நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஹிப்பாப் தமிழா, “விரைவில் குணம் அடையுங்கள் அண்ணா” என என்று குறிப்பிட்டிருக்கிறார். இதேபோல் தொகுப்பாளினி டிடி (எ) திவ்யதர்ஷினி மா.கா.பாவின் இன்ஸ்டாகிராமில், “மிக சீக்கிரம் குணமாக வேண்டும்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.