நடிகர் ராமராஜனின் உடல்நிலையில் பிரச்சனையா? என்ன ஆச்சு?.. வெளியான பரபரப்பு விளக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீபத்தில் நடிகர் ராமராஜன் உடல் நிலை பற்றி வலம் வந்த பல்வேறு கட்ட தகவல்களுக்கு தற்போது அவரது தரப்பில் இருந்து முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் ராமராஜன் 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்தமான நடிகர்களுள் ஒருவராக  அறியப்படுபவர். இவர் நடித்த கரகாட்டக்காரன் படம் மட்டுமல்ல, மேலும் பல படங்களும் பல நூறு நாட்கள் ஓடி  வசூலில் சாதனை புரிந்து தமிழ் சினிமா வரலாறில் சரித்திரம் படைத்தவையாக இருக்கின்றன.

இப்படி தனக்கென ஒரு பாணியில் வலம் வந்தவரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான மக்கள் நாயகன் ராமராஜனை பற்றி தற்சமயம் அவருக்கு கிட்னி ஃபெயிலியர் உள்ளிட்ட தவறான வதந்தியை பரப்பி வருவதாக கூறப்படுகிறது.

எனவே திரு.ராமராஜன் அவர்கள் பூரண நலத்துடன் இருக்கிறார். யாரும் இந்த வதந்தியை நம்பவேண்டாம் என்றும் ராமராஜன் தரப்பில் இருந்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது. திரைப்பட பணிகளை பொறுத்தவரை, இரண்டு படங்களுக்கு தனது கதையை தந்துள்ள ராமராஜன், அடுத்ததாக இரண்டு படங்களில் நடிப்பதற்கு தன்னை தயார்படுத்தி வருகிறார் என்று தற்போது குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்  ராமராஜன் உடல்நலத்துடனும் மனவலிமையுடனும் இருக்கிறார் என்றும் விரைவில் அவர் நடிக்கும் பட துவக்க விழாவில் கொள்வார் என்று ராமராஜனின் மக்கள் தொடர்பாளர் (PRO) விஜயமுரளி தெரிவித்துள்ளார்.

What happened to 90S actor ramarajan health update

People looking for online information on Actor ramarajan, Ramarajan will find this news story useful.