நேற்று பிக்பாஸ் வீட்டில் சனம் ஷெட்டி-பாலாஜி முருகதாஸ் இடையில் மீண்டும் ஒரு பெரிய சண்டை நடந்தது. தறுதலை என பாலாஜி, சனமை அழைக்க நீ எப்படி என்ன சொல்லலாம்? என சனம் அவரிடம் கேட்டார். பதிலுக்கு பாலாஜி நீ மட்டும் என்ன நேத்து உதைச்சே என்றார். முதலில் சாதுவாக தொடங்கிய சண்டை பின்னர் உக்கிரம் அடைந்தது. நடுவில் ஆரி, அனிதாவுடன் சேர்ந்து பஞ்சாயத்து செய்யப்ப்போனார்.
அவரை நோக்கி கையெடுத்து கும்பிட்ட பாலாஜி தயவுசெஞ்சு போங்க எல்லாத்துக்கும் வந்து நிக்குறீங்க என சொன்னார். தொடர்ந்து மீண்டும் பாலா-சனம் இடையில் சண்டை நடந்தது. அப்போது சனம் வா வந்து என்ன உதைச்சுக்கோ என இடுப்பை காட்டி சொன்னார். இதைப்பார்த்த பாலாஜி நீ எவிக்ட் ஆவேன்னு நெனச்சேன் அது நடக்கல என மனதில் இருப்பதை எல்லாம் சொல்லி சண்டை போட்டார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் உண்மையில் என்ன நடந்தது? என வீடியோ பகிர்ந்து வருகின்றனர். அதில் பாலாஜி-சனம் இருவரும் கேசுவலாக பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது சனம் விளையாட்டாக அவரை உதைக்க பாலாஜி தேங்க்யூ என சொல்கிறார். அதில் தவறுதலாக எதுவும் இல்லை. ஆனால் இந்த சின்ன விஷயத்தை வைத்து பாலாஜி ஏன் அவ்வளவு பெரிய பிரச்சினையை எழுப்பினார்? என தெரியவில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.