நேற்று பிக்பாஸ் கொஞ்சம் மொக்கையாக கேட்ச் பால் என ஒரு டாஸ்க் கொடுத்தார். இதற்காக கார்டன் ஏரியாவில் பெரிய,பெரிய பைப்புகள் வைத்திருந்தனர். சவுண்ட் வரும்போது பந்துகள் பைப்புகள் வழியாக வந்து கீழே விழும். அதை விழுவதற்குள் இரண்டு அணிகளும் பிடிக்க வேண்டும். ஒவ்வொரு பாலுக்கும் ஏற்ப பாயிண்ட்ஸ் எண்ணிக்கை மாறுபடும்.
இதில் ஆரி அணியில் அனிதா, ஆஜீத், ஷிவானி, பாலாஜி ஆகியோரும் சோம் அணியில் கேப்ரியலா, ரம்யா, ரியோ ஆகியோரும் இருந்தனர். ஆரம்பத்தில் இருந்தே சோம் அணியினர் நன்றாக விளையாடி பாயிண்ட்ஸ் அதிகம் எடுத்தனர். ஆனால் ஆரி அணி கொஞ்சம் சொதப்பியது. போட்டியாளர்கள் செய்யும் தவறுகளை வைத்து பிக்பாஸ் ரூல்ஸை மாற்றிக்கொண்டே இருந்தார்.
கடைசியில் இரவும் முழுவதும் இந்த டாஸ்க் நடைபெற்றது. அப்போது இடையில் சிவப்பு பந்துகள் வரும் அதை பிடித்தால் அணியினரின் பாயிண்ட்ஸ் மொத்தமாக பறிபோகும் என பிக்பாஸ் அறிவித்தார். பாலாஜி அதிர்ஷ்டவசமாக இரண்டு பந்துகளை பிடிக்க மொத்த டீம் பாயிண்ட்ஸும் பறிபோனது. இதையடுத்து ஆரி அணியினர் அனைவரும் சிவப்பு கலரில் டீசர்ட் போட்டு விளையாடினர்.
சிவப்பு பந்து பட்டாலும் கூட துணி கலரில் தெரியாது. அனைவரையும் குழப்பி விடலாம் என்பது அவர்களின் எண்ணம். இதைப்பார்த்த நெட்டிசன்கள் என்ன ஒரு புத்திசாலித்தனம் என கிண்டலடித்து வருகின்றனர். இதையெல்லாம் வச்சு பாக்குறப்ப இன்னைக்கு விளையாட்டு ரொம்ப உக்கிரமா இருக்கும் போல !