பிள்ளையார் சுழி போட்ட டிவி நிகழ்ச்சி!.. மணப்பந்தல் காணும் விக்கி கவுஷல் - கத்ரினா கைஃப் கதை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் நடிகர் விக்கி கவுஷலுக்கும் (Vicky kaushal), நடிகை கத்ரினா கைஃபுக்கும் (Katrina kaif) வரும் டிசம்பர் 9-ம் தேதி நடைபெறவுள்ள திருமணம் தான் தற்போது இணையத்தில் ஹாட் ட்ரெண்டிங் டாப்பிக்காக மாறியுள்ளது.

Advertising
>
Advertising

ராஜஸ்தானில் உள்ள பார்வாரா - சவாய் மாதோபூர் சிக்ஸ் சென்ஸ் கோட்டை  (Six Senses Fort Barwara) ரிசார்ட்டில் நடக்கவிருக்கும் இந்த திருமணத்தை ஒட்டி, தம்பதியரின் மெஹந்தி, சங்கீத், ஹல்தி உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளும் களைகட்டியுள்ளன.

இதனிடையே திருமணத்திற்காக 6-ம் தேதியே மும்பையில் இருந்து கத்ரினா கைஃப் விடைபெற்றார். ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் இருந்து இந்த திருமண ஜோடி விஐபிக்கள் செல்லும் வழியாக திருமண நிகழ்விடத்தை அடைகிறார்கள். இந்நிலையில் இவர்களின் காதல் கதைகள் பலரிடையே பேசுபொருளாகியுள்ளன.

இவர்களின் கதை நடிகர் மற்றும் தொகுப்பாளர் கரண் ஜோகரின் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் இருந்து தொடங்குகிறது. 2018-ம் ஆண்டு நடந்த  இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை கத்ரினாவிடம், யாருடன் சேர்ந்து நடிக்க விருப்பம் என கரண் ஜோகர் கேட்டதற்கு, அதற்கு தான் விக்கி கவுஷலுடன் சேர்ந்து நடித்தால் நன்றாக இருக்கும் என்று கத்ரினா கூறினார்.

பின்னர் இந்த விஷயத்தை இன்னொரு நிகழ்ச்சியில் கரண் ஜோகர் விக்கி கவுஷலிடம் கூற, அவர் ஒரு கணம் மயங்கியே விழுந்துவிட்டார். அதன் பின்னர் கடந்த 2019-ஆம் ஆண்டு ஒரு திரைப்பட விருது விழாவில், விக்கி கவுஷல் விளையாட்டாக தனது மனதை கத்ரினாவிடம் வெளிப்படுத்திய நிகழ்வு பிரபலமானது.

இதனிடையே சல்மான் கானுடன் இணைந்து கத்ரினா கைஃப் டைகர் படத்தில் நடித்து வந்தார். திருமணத்துக்கு பின்னர் அப்படத்தில், கத்ரினா தனது போர்ஷன்களில் தொடர்ந்து நடிக்கவுள்ள நிலையில் விக்கி கவுஷலுடனான இந்த திருமணத்திற்காக 6-ஆம் தேதி மும்பையில் இருந்து புறப்பட்டு சென்றார் கத்ரினா கைஃப். இவர்களின் திருமணம் பாலிவுட்டில் பெரும் திருவிழாவாகவே மாறிவிட்டது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Wedding couples Vicky Kaushal Katrina Kaif story started

People looking for online information on KatrinaVickywedding, Latest cinema news, Latest tamil news, VicKat, VickyKatrinaWedding, Vickykaushal will find this news story useful.