முதல் முதலாக வெப் சீரிஸில் மனோபாலா .. ஹீரோவாகும் ‘நெற்றிக்கண்’ பட நடிகர்! யார்னு பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த  ‘ஊர்காவலன்’, விஜயகாந்த் நடித்த ‘சிறைப்பறவை’, ‘என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்’, ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’, ‘கருப்பு நிலா’ உள்பட சுமார் 20க்கும் மேலான திரைப்படங்களை இயக்கியவர் மனோ பாலா.

Web Series named Mr Uthaman starring Manobala மனோ பாலா

மேலும் இவர் நூற்றுக்கும் மேலான திரைப்படங்களில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். ‘சதுரங்க வேட்டை’, ’பாம்பு சட்டை’ உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்தும் இருக்கிறார். 

Web Series named Mr Uthaman starring Manobala மனோ பாலா

இந்நிலையில் தற்போது மனோ பாலா முதல் முறையாக வெப் தொடர் ஒன்றில் நடித்து இருக்கிறார்.

'மிஸ்டர் உத்தமன்' என்று பெயர் வைத்து இருக்கும் இந்த வெப் தொடரை நிஷாந்த் லோகநாதன் இயக்கி இருக்கிறார். 

மிஸ்டர் உத்தமன் வெப் தொடரை காதல், காமெடி, ஃபேண்டசி கலந்து உருவாக்கி இருக்கிறார்கள்.

இதில் முதன்மை கதாபாத்திரத்தில் சச்சின் நாச்சியப்பன் நடிக்கிறார். இவர் நயன்தாராவுக்கு தம்பியாக ‘நெற்றிக்கண்’ படத்தில் நடித்திருந்தார்.

யூடியூப், விளம்பர படங்களில் நடித்த பிரணிகா தக்ஷு இதில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த வெப் தொடர் செப்டம்பர் 3-ஆம் தேதி முதல் 'ஸ்டே டியூன்' என்ற யூடியூப்பில் வெளியாக இருக்கிறது.

Also Read: "ஆடும்போது மேல கை போட்டுட்டாரு".. "Night Hotel Room கதவ தட்னாங்க" - நடனக் கலைஞர் பிரியங்கா பேட்டி..Video

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Web Series named Mr Uthaman starring Manobala மனோ பாலா

People looking for online information on Manobala, Mr Uthaman, Nayanthara, Netrikann, Sachin Nachiappan will find this news story useful.