"யார் ஜெயிச்சாலும் கட்டிங் போட்டுக்கலாம்!"... BIGGBOSS வீட்டுக்குள் அபிஷேக் ராஜாவின் VIRAL போன் TALK!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி: மிக பிரபலமாக ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 5 தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

Advertising
>
Advertising

BiggBossTamil5: இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். கமல்ஹாசன் பிக்பாஸ் போட்டியாளர்களை வாரத்தின் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சந்தித்து பேசுவது வழக்கமான ஒன்று. முன்னதாக, போனவாரம் 12 லட்சம் ரூபாய் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு. பிக்பாஸ் போட்டியாளர் சிபி இப்போட்டியை விட்டு வெளியேறினார்.

வார இறுதியில் நடந்தது என்ன?

இந்நிலையில் வார இறுதியில் கமலஹாசனுடன் சேர்ந்து சிபியும் போட்டியாளர்களை அகம் டிவி வழியே சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் போட்டியில் இருந்து இதற்கு முன்னதாக வெளியேறிய பல போட்டியாளர்கள், ஞாயிற்றுக்கிழமை அன்று பிக்பாஸ் வீட்டுக்குள் தற்போது இருக்கும் போட்டியாளர்களிடம், கமல்ஹாசன் முன்னிலையில் போனில் பேசினர்.

ஐந்தாவது சீசன் தான் பெஸ்ட்

அந்நேரம் பிக்பாஸ் வீட்டுக்குள் தாமரைச் செல்வி, பிரியங்கா, பாவனி, ராஜீ, அமீர், நிரூப் ஆகியோர் இருந்த நிலையில், அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், உற்சாகப்படுத்தும் விதமாகவும், போனில் (வெளியேறிய) முன்னாள் போட்டியாளர்கள் பேசி மகிழ்வித்தனர்.

அதன்படி பிரியங்காவிடம் அபிஷேக்கும், தாமரைச் செல்வி மற்றும் ராஜூவிடம் அக்‌ஷராவும், நிரூப்பிடம் அண்ணாச்சியும், பாவனியிடம் சுருதியும், அமீரிடம் சிபியும், ராஜூவிடம் வருணும் பேசினர். இதில் அக்‌ஷரா பேசும் போது இதுவரை நடந்த பிக்பாஸ் போட்டியிலேயே ஐந்தாவது சீசன் தான் பெஸ்ட் என கூறினார். மேலும் தாமரையை நலம் விசாரித்தார்.

யார் ஜெயிச்சாலும் கட்டிங் போட்டுக்கலாம்!

இதேபோல், அபிஷேக் பேசும் போது மிகவும் ஜாலியாகவும் மோட்டிவேஷனாகவும் பிரியங்காவிடம் பேசினார். மற்ற போட்டியாளர்களிடையேயும் ஊக்கப்படுத்தி பேசிய அபிஷேக், “பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களில் யார் ஜெயித்தாலும் சந்தோஷம் தான், இன்னும் ஒருவாரம் தானே? அப்படியே யார் ஜெயித்தாலும் அந்த அனைவரும் பாகப்பிரிவினை செய்து கட்டிங் போட்டுக் கொள்ளலாம்!” என ஜாலியாக கூறினார்.

இந்த சீசன் போட்டியாளர்களிடையே இருக்கும் இத்தகைய நட்பை வேறு சீசன்களில் காண முடியவில்லை என்று கமல்ஹாசன் முன்னதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ‘வாழவெச்ச BiggBoss வீடு’..  Eliminate ஆகும்போது எமோஷனல் ஆன தாமரை! இவ்ளோ ரசிகர்களை அழவெச்சுட்டாங்களே!

தொடர்புடைய இணைப்புகள்

We will share success abhishek motivation talk biggboss5

People looking for online information on Abhishek raaja, Biggboss tamil 5, BiggBoss5, KAMALHAASAN, Vijay Television, Vijay television trending, Vijay tv will find this news story useful.