தளபதி விஜய்யாக மாறிய கிரிக்கெட் வீரர் வார்னர்... ரசிகர்கள் கொண்டாடும் புதிய வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சேவியர் ப்ரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ஜெரமியா, சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த மாஸ்டர் திரைப்படத்தில் இரு சூப்பர்ஸ்டார்களான தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி கதாபாத்திரங்களுக்கு இடையே மோதல் பார்வையாளர்களைச் சீட்டின் நுனிக்கு கொண்டு வரக்கூடியவை. அனிருத் இசையில் பாடல்களும் வேற லெவெல் ஹிட் அடித்தது.

லாக்டவுன் நேரத்தில் பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் தனது மனைவி மற்றும்   குழந்தைகளுடன் டிக் டாக் மூலம் வீடியோ வெளியிட்டு வந்தார். அதன் ஒரு பகுதியாக அல்லு அர்ஜூனின் 'அல வைக்குந்தபுரம்லோ' பட பாடலான 'புட்ட பொம்மா'விற்கு தனது மகளுடன் வித்தியாசமாக நடனமாடி வீடியோ வெளியிடிட்டிருந்தார். அந்த வீடியோ செம வைரலானது. இந்நிலையில் தற்போது கமலஹாசனின் இஞ்சி இடுப்பழகி பாடல் டியூனுக்கு தனது மனைவி, மகளுடன் வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வரிசையில் தற்போது  அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். மாஸ்டர் படத்தின் பாடலுக்கு நடிகர் விஜய் போலவே மாறி கிராபிக்ஸ் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தளபதி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Tags : Vijay, Warner

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Warner new thalapathy video goes viral விஜய்யாக மாறிய கிரிக்கெட் வீரர் வார்னர்

People looking for online information on Vijay, Warner will find this news story useful.