“CRICKET-ல ‘தல’ தோனி.. சினிமா-ல ரஜினி, கமல்...” - BEHINDWOODS விருது விழாவில் VVS லக்‌ஷ்மன்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

8வது Behindwoods Gold Medals விருதுகள் வழங்கும் விழா அண்மையில் நிகழ்ந்தது. 25 ஆயிரம் பார்வையாளர்களுடன் சென்னை தீவுத்திடலில் மிக பிரம்மாண்டமாக நடந்த இந்த நிகழ்வில் கலந்துகொண்ட கிரிக்கெட் பிரபலமான விவிஎஸ் லக்‌ஷ்மனுக்கு "கோல்டன் குளோபல் ஐகான் ஆஃப் இன்ஸ்பிரேஷன்" எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Advertising
>
Advertising

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், இயக்குநர் வெங்கட் பிரபு சூழ வருகை தந்து விவிஎஸ் லக்‌ஷ்மனுக்கு இந்த விருதினை வழங்கி கௌரவித்தனர்.

இந்நிகழ்வில் விவிஎஸ் லக்‌ஷ்மனிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.  அவற்றுள், “சிறந்த கேப்டன் யார் - கோஹ்லி சார் அல்லது தோனி சார்?” என்கிற கேள்விக்கு, “இரண்டு பேரும்” என்று பதில் அளித்து அரங்கத்தை கைத்தட்டல்களால் அதிரவைத்தார்.

இதேபோல், தல - தோனி பற்றி கேட்டதற்கு பதில் அளித்த விவிஎஸ் லக்‌ஷமன், “ஒரே ஒரு தல தான் கிரிக்கெட்டில்.. எங்களுக்கு தெரியும்” என்று பதில் அளித்தார். இதேபோல் திரைப்படங்களிலும் ஒரே ஒரு தல தான் என்று கூறிய விவிஎஸ் லக்‌ஷ்மன், “ரஜினிகாந்த் சார் மற்றும் எனக்கு பிடித்த நடிகர்கள் உண்மையில் வளர்ந்தவர்கள்.. கமல்ஹாசன் சார், ரஜினிகாந்த் சார் .. ஏனென்றால் இவர்களின் எல்லாப் படங்களும் தமிழில் உருவானவை.. ஆனால் நான் சிறுவயதில் தெலுங்கில் படங்கள் பார்த்தேன், க்ஷத்திரிய புத்ருடு, அருணாச்சலம், பாஷா...” என்று விவிஎஸ் லக்‌ஷ்மன் பதில் அளித்திருந்தார்.

திரைப்பட துறையினரை கௌரவிக்கும் Behindwoods Gold Medals விருதுகள், பல்வேறு துறைகளை சேர்ந்த சமூக சாதனையாளர்களை கவுரவிக்கும் Behindwoods gold Icons - Honour of Inspiration, இசை மற்றும் பாடல் துறை சாதனையாளர்களை கவுரவிக்கும் Behindwoods Mic awards மற்றும் Behindwoods விருதுகளின் மற்றுமொரு அங்கமாக டிஜிட்டல் மற்றும் சோஷியல் மீடியா துறைகளில் சாதனை படைப்பவர்களை கவுரவிக்கும் பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு டிஜிட்டல் & டிவி விருதுகள் (Behindwoods Gold Digital & TV Awards) வழங்கும் விழாக்களும் ஏகோபித்த நன்மதிப்பை பெற்று வருகின்றன.

Also Read | AK61 கெட்-அப்பில் சென்னைக்கு அருகில் உள்ள போலீஸ் அகாடமியில் நடிகர் அஜித்.. வைரல் வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

VVS Laxman answer about dhoni rajini kamal BGM8

People looking for online information on Behindwoods, Behindwoods Gold Medals, VVS Laxman will find this news story useful.