வெந்து தணிந்தது காடு படத்திற்காக களமிறங்கிய கௌதம் மேனன்! அவரே வெளியிட்ட வைரல் BTS புகைப்படம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: வெந்து தணிந்தது காடு படத்தின் BTS புகைப்படம் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

பிரபல OTT-க்கு ஹன்சிகா - சாந்தனு நடிக்கும் புதிய வெப் - சீரிஸ்! BTS Image உடன் வெளியான Update!

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களின் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர். ரகுமான், சிம்பு மற்றும் கௌதம் மேனன் ஆகிய மூவர் கூட்டணி அடுத்து இணையும் படத்திற்கு ‘வெந்து தணிந்தது காடு’ என பெயரிடப்பட்டது.இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

கவிஞர் தாமரை பாடலாசிரியராக ஒப்பந்தமாகியுள்ளார். கலை இயக்குனராக ராஜிவ் நாயரும், உடை வடிவமைப்பாளராக கௌதம் மேனனின் தங்கை உத்தாரா மேனனும் பணிபுரிகின்றனர். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் திருச்செந்தூரில் ஆரம்பமானது. பின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக குஜராத்தைச் சேர்ந்த தெலுங்கு நடிகை சித்தி இத்னானி நடிப்பதாக  சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது, இதனை பிரத்யேக போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்தது. ஏற்கனவே இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. சிம்பு பிறந்தநாளுக்கு இந்த படத்தின் புதிய போஸ்டர் வெளியானது.

இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் முழுவீச்சில் நடந்து வந்தது. இந்த படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு இன்று (09.02.2022) முதல் ,மும்பையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த தனது BTS புகைப்படத்தை கௌதம் மேனன் வெளியிட்டுள்ளார்.  அதில் படத்தின் 62வது காட்சி படமாக்கப்பட்டு வருகிறது என தெரிகிறது. ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளை விட அதிகம் சொல்லும் என இந்த புகைப்படத்திற்கு கேப்சன் எழுதியுள்ளார் கௌதம் மேனன்.

ஹிஜாப் விவகாரம்: தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது - கமல்ஹாசன் பரபர டிவீட்

தொடர்புடைய இணைப்புகள்

VTK Gautham Menon BTS image went Viral on social media

People looking for online information on ஏ.ஆர். ரகுமான், கௌதம் மேனன், வெந்து தணிந்தது காடு, Gautham Menon, Silambarasan, VTK will find this news story useful.