தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்படும் சூழலில் ஒரு சந்தோஷமான நற்செய்தி வந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் எதிரொலித்தது. இதை தொடர்ந்து, ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால், தியேட்டர்கள் மூடப்பட்டன.
இந்நிலையில் தற்போது தியேட்டர்களை திறந்து கொள்ள அரசு உத்தரவு அளித்துள்ள நிலையில், இன்று தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தமிழகத்தில் மீண்டும் திரையரங்கங்கள் திறக்கப்படுகிறது. இந்த விஷயம் சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இதனிடையே மேலும் ஒரு நற்செய்தியை க்யூப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நவம்பர் மாதம் திரைப்படங்களை திரையிடுவதற்காக கட்டப்படும் Virtual Print Fee என்ற கட்டனத்தை நூறு சதவீதம் ரத்து செய்தவதாக க்யூப் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.