'ஃபிட்னஸ் ஃப்ரீக்'-ஆன விஜே ரம்யா சமீபத்தில் தனது ஃபிட்னஸ் அனுபவம் குறித்து பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விருது நிகழ்ச்சிகள், திரைப்பட நிகழ்ச்சிகள் எனப் பல மேடை நிகழ்ச்சிகளில் தன் திறமையால் பார்வையாளர்களை ஈர்த்தவர் விஜே ரம்யா. அது மட்டுமல்லாமல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ஓகே கண்மணி’, ‘வனமகன்’, ‘மாசு என்கிற மாசிலாமணி’ ஆகிய திரைப்படங்களில் சில வேடங்களில் நடித்துள்ளார்.
உடற்பயிற்சி மேற்கொண்டு உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்வதில் விஜே ரம்யா கூடுதல் கவனம் செலுத்துபவர் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் ஃபிட்னஸ் தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய ரம்யா, தான் கடந்து வந்த ஃபிட்னஸ் அனுபவங்கள் குறித்து பகிர்ந்துக் கொண்டார்.
அதில், சிறுவயதில் பிடித்ததை எல்லாம் சாப்பிட்டு உடல் பருமனாக இருந்ததாகவும், எடையை குறைக்கச் சொல்லி அப்பா திட்டிக் கொண்டே இருப்பார் என்றும் கூறினார். பின் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டபோது 3-4 கிலோ எடை குறைந்து உடல் மெலிந்து காணப்பட்டேன். அப்போது நிறைய பசங்க உடல் எடை குறைச்சிட்டன்னு பேசினாங்க. அதன் பின் பல ஃபிட்னஸ் முயற்சிகளை மேற்கொண்டேன்.
ஃபிட்னஸ், உடல் எடை குறைப்பது பற்றி யார் என்ன சொன்னாலும் அதை பின் பற்றியதோடு, ஜிம், ஜும்பா, ஏரோபிக்ஸ், வித விதமான டயட்ன்னு எல்லாமே முயற்சி செய்தும் ஒரு பலனும் இல்லை. அதன் பிறகு தான் க்ராஸ் ஃபிட்னஸ் என்பது பற்றி கேள்விப்பட்டு அதையும் முயற்சித்தேன். ஒரே வாரத்தில் நல்ல முன்னேற்றம்.
ஃபிட்னஸ் என்பது உடலை சார்ந்த விஷயமாக பார்க்கப்படுகிறது, ஆனால் எனது விஷயத்தில் அது மனதளவில் என்னை வலிமைப்படைத்தவளாக மாற்றியிருக்கிறது என விஜே ரம்யா தெரிவித்தார்.