'ரக்‌ஷனா இது?'.. 'அப்ப இருந்தே இப்படியா? என்னா ஒரு ஹார்டு வொர்க்!'.. VIRAL ஸ்டில்ஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் விஜேக்களாக இருப்பவர்களுக்கு கண்டிப்பாக மல்டி டேலண்டும், அதீத திறமையும் இருக்கும் என்பதை பல பிரபலங்களின் சாதனைகள் மூலம் உணர்ந்திருப்போம்.

குறிப்பாக விஜய் டிவி லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்துக் கொண்டிருந்த சந்தானம், பிற்காலத்தில் மிகப்பெரிய காமெடி நடிகராகவும் இன்று ஹீரோவாகவும் உயர்ந்திருக்கிறார். இதேபோல் விஜய் டிவியில் விஜேவாக இருந்த சிவகார்த்திகேயன் இன்று தனது திறமையால் மிகப்பெரிய நடிகராக மலர்ந்திருக்கிறார்.

அந்த வகையில் பல பிரபலங்கள் விஜய் டிவியின் மூலமாக வெள்ளித்திரைக்கு வந்துள்ளனர். அப்படி விஜய் டிவி நிகழ்ச்சிகளில் விஜேவாக இருக்கும் ரக்‌ஷன் அவ்வப்போது கலக்கப்போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கேமியோ ரோல்களை ஏற்று நடித்து தனது தனித்திறமையை வெளிப்படுத்தி வந்தார்.

இதனிடையே வெள்ளித்திரையில் கடந்த வருடம் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் துல்கருடன் இணைந்து நடித்து அசத்தினார். இந்நிலையில் ஆரம்ப காலத்தில் அது இது எது நிகழ்ச்சியில் இடையிடையே நிகழ்த்தப்படும் காமெடி கான்செப்ட்களில் தான் நடித்திருந்த ஸ்டில்களை ரக்‌ஷன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து, ‘தெரியாதவர்களுக்கு’ என்று பதிவிட்டுள்ளார்.

இதைப் பார்த்த பலரும், ‘அடையாளமே தெரியல.. ரக்‌ஷனா இது? நீங்க பதிவிட்ட பின்பு தான் நீங்க அது இது எது நிகழ்ச்சியில் நடிச்சிருக்கீங்கனே தெரியுது. நேரா கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு விஜேவா வந்துட்டீங்கனு நெனைச்சோம், ஆனா உங்க கடின உழைப்பால் தான் நீங்கள் இந்த நிலையை இப்போது அடைந்திருக்கீங்க’ என்று கமெண்டுகள் பதிவிட்டு வருகின்றனர்.

ALSO READ: 'பாவம்யா கண்ணம்மா.. ரியாலிட்டி ஷோவில் வெச்சு செஞ்ச வில்லிகள்!'.. Viral ஆகும் Promo!

தொடர்புடைய இணைப்புகள்

VJ rakshan trending throwback pics vijay tv programme

People looking for online information on Anchor, AthuIthuEthu, Kalakka Povathu Yaru, Photos, Santhanam, Sivakarthikeyan, Trending, Vijay Television, Viral, VJ Rakshan will find this news story useful.