VJ ரக்‌ஷன் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்.. ஃபோட்டோவுடன் KPY தீனா செம அப்டேட்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

VJ ரக்சன் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை நடிகர் தீனா வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | Viruman: பிரபல OTT-யில் ரிலீஸாகும் கார்த்தி நடித்த "விருமன்" திரைப்படம் .. எப்போ? எதுல?

விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் ரக்‌சன்.

கடந்த 2019 ஆம் ஆண்டு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடிகராக அறிமுகமானார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது.

இந்நிலையில் ரக்சன் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு (ஆனி) முன் வெளியானது.

இந்த படத்தினை பிலியா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் குவியம் மீடியா ஒர்க்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இந்தப் படத்தை இரா.கோ. யோகேந்திரன் இயக்குகிறார். இசையமைப்பாளர் சச்சின் வாரியர் இசையமைக்கிறார், பாடலாசிரியர் தாமரை இந்தப் படத்தின் பாடல்களை எழுதுகிறார். ஒளிப்பதிவாளர் கோபி துரைசாமி இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தில் கலக்கப்போவது யாரு தீனா, விஷாகா திமான், பிராங்க்ஸ்டர் ராகுல்   நடிக்கின்றனர். இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு  கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்து முடிந்தது என தீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் படப்பிடிப்பு புகைப்படத்தை பகிர்ந்து அறிவித்துள்ளார்.

 

Also Read | 'பொன்னியின் செல்வன்' சிறு வயது நந்தினியாக பிரபல இளம் நடிகை.. டிரெய்லர்ல கவனிச்சீங்களா?

Vj Rakshan new movie shooting first schedule wrapped

People looking for online information on VJ Rakshan, Vj Rakshan new movie will find this news story useful.