விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது semi-finals முடிந்துள்ளது ரசிகர்களுக்கு சோகத்தை அளித்துள்ளது. ஏனென்றால் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு தற்போது மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஒவ்வொரு வார இறுதியிலும் கவலைகளை மறந்து சிரிக்க இந்த நிகழ்ச்சி ஒரு பெரிய அருமருந்தாக இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். எனவே இன்னும் சில எக்ஸ்ட்ரா வாரங்கள் இந்த நிகழ்ச்சி நடைபெற்றால் கூட நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். அதேபோல் சீக்கிரமே வைல்டு கார்டு சுற்று நடைபெற இருக்கிறது.
விஜய் டிவியில் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி 'கலக்கப்போவது யாரு'. இந்த நிகழ்ச்சியின் கடந்த 5, 6, 7 சீசன்களை ஜாக்லினுடன் சேர்ந்து தொகுத்து வந்தவர் ரக்ஷன். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர் அறந்தாங்கி நிஷா உடன் குக் வித் கோமாளி சீசன் ஒன்னை தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் நிஷா பிக்பாஸ் சென்று விட இரண்டாம் சீசனை சிங்கிள் ஆங்கராக தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் துல்கர் சல்மானுடன் "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்" என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகர் ரக்ஷன் தற்போது ஒரு பதிவிட்டுள்ளார். அதில் "இவை எல்லாவற்றுக்கும் முன்பு ஆரம்பத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய 'அது இது எது' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற போது எடுத்த நெகிழ்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இது பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக தான் இருந்தது. இந்நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.