“இந்தா”.. தெறிக்கவிட்ட பிரியங்கா... திகைச்சுப்போன MALE CONTESTANTS! முதல் நாளே இப்படியா? #BIGGBOSSTAMIL5

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜே பிரியங்கா விஜய் டிவியின் பல முன்னணி ரியாலிட்டி ஷோக்களில் ஆங்கரிங் செய்ததன் மூலம் பலருக்கும் பிரியமானவரானார். 

VJ Priyanka stripped off wig first day fun biggbosstamil5

ஷோ நடக்கும் பொழுது தனக்கே உரிய இயல்பால் காமெடி செய்து அரங்கத்தை அதிர வைக்கும் பிரியங்கா மிகவும் இலகுவாக ஒரு ஷோவை மிகவும் கலகலப்பாகக் கொண்டு செல்வதில் வல்லவர். இந்நிலையில் அப்படியே தான் தற்போது பிக்பாஸ் வீட்டிலும் பிரியங்கா இருக்கத் தொடங்கியிருக்கிறார்.

VJ Priyanka stripped off wig first day fun biggbosstamil5

ஆம், பிக்பாஸ் ஐந்தாவது சீசன் நிகழ்ச்சி அக்டோபர் 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கியது. இந்த நிகழ்ச்சியின் முதல் நாளன்று பிக் பாஸ் போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டனர். அந்த வரிசையில் பிக் பாஸ் வீட்டுக்குள் கிட்டத்தட்ட பதினெட்டு போட்டியாளர்கள் வந்துவிட்டனர்.

இவர்களுடன் நிரூப் ஆனந்த் என்கிற போட்டியாளரும் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கிறார். இவர் அதிக தலைமுடி வைத்திருந்தார். அவரைப்பார்த்து பிரியங்கா வியந்தபடி பேச, அதே வீட்டுக்குள் இருக்கும் சின்னத்திரை நடிகர் ராஜு மற்றும் நடிகர் வருண் பிரியங்காவை பார்த்து உங்கள் தலை முடிக்கு என்ன என்று கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு பிரியங்காவோ, “என்னப்பா இப்படி கேட்டுட்டீங்க.. இதெல்லாம் விக் முடிப்பா!”.. என்பது போல் தலை முடியிலிருந்து சவுரி முடியை ஒவ்வொன்றாக கழட்டி எடுத்து கையில் தருகிறார்.


இதை பார்த்த பலரும், “ஆஹா பிக்பாஸ் வீட்டுக்குள் போன முதல் நாளே விஜய் டிவி விஜே பிரியங்கா தன்னுடைய அட்ராசிட்டியை தொடங்கிவிட்டாரே!” என்று பேசத் தொடங்கி இருக்கின்றனர். இன்று முதல் பிக்பாஸ் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “அடக்கடவுளே!.. இந்த சின்ன வயசுல இந்த பொண்ணோட நெலம யாருக்கும் வரக்கூடாது”..  பிக்பாஸ் பவானிக்காக கலங்கும் ரசிகர்கள்!

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

VJ Priyanka stripped off wig first day fun biggbosstamil5

People looking for online information on பிக்பாஸ், Biggbosstamil, BiggBossTamil5, GrandLaunch விஜய் டிவி BBTamilSeason5, Kamalhassan, Piriyanka, Priyanka, Priyanka BiggBoss, Priyanka BiggBossTamil5, Priyanka Wig, Raju BiggBoss, VijayTelevision, VJ Piriyanka, VJ Priyanka will find this news story useful.