இந்த தடவை பிக்பாஸ்ல எலிமினேஷன் எப்படி இருக்கும் தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 1 மற்றும் 2 ஆகிய நிகழ்ச்சிகள் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. ஒரு வீடு, நாறு நாள், 15 போட்டியாளர்கள் என அந்த கான்சப்டே சுவாரஸியம் தந்தது.

தற்போது பிக்பாஸ் மூன்றாவது சீஸன் வருகிற ஜூன் 23 அன்று ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீடியாவை சேர்ந்த நபர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று வந்தனர். Behindwoods Tv சார்பாக விஜே நிக்கி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று வந்தார்.

இது குறித்து பேசிய நிக்கி, உள்ள போகும் போது கண்ண கட்டி தான் கூட்டிட்டு போனாங்க. என் வாட்ச், செல்போன் எல்லாத்தையும் வாங்கி வச்சுட்டாங்க. உள்ள போனதும் மைக் மாட்டி என்ன செக் பண்ண சொன்னாங்க.

இந்த தடவை பார்க்கும் போது ஆர்ட் வொர்க் ரொம்ப வித்தியாசமா இருந்தது. கமலோட படம் வரையப்பட்டிருக்கு. ஆண்கள், பெண்கள் ரூம் ஓபனாக இருக்கு. அங்க இருந்து பேசுனது இங்க கேட்கும்.

செகண்ட் சீசன்ல ஜெயில் இருந்தது இல்லையா ? - அதே மாதிரி தேர்டு சீசன்லயும் ஜெயில் இருக்கு. உங்க 15 பேர்ல ஒருத்தர செலக்ட் பண்ணி ஜெயிலுக்கு அனுப்பிடனும்னு சொல்லிட்டாரு. கிச்சன் வந்து பஸ் மாதிரி இருக்கு. இந்த தடவை ஸ்மோக்கிங் ஏரியா ஒரு குகை மாதிரி இருக்கும். குனிஞ்சு தான் உள்ள போகனும்.

தூங்கி எழுந்ததும் பாட்டு போடுவாங்கல்ல. இந்த முறையும் பாட்டு போட்டாங்க. பின்னாடி மறுபடியும் அந்த பாட்டு போடுறாங்க. இந்த தடவை எலிமனேட் நேரடியா பண்ணுவாங்க. கார்டன் ஏரியாவுல எல்லோருடைய முன்னாடியும் யார எலிமனேஷனுக்கு நாமினட் பன்றோம் எதுக்காக பன்றோம்னு எல்லோருடைய முன்னாடியும் சொல்லனும்.

இந்த தடவை பிக்பாஸ்ல எலிமினேஷன் எப்படி இருக்கும் தெரியுமா ? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vj Nikki Shares his experience in Kamal Haasan Biggboss

People looking for online information on Bigg boss, Kamal Haasan will find this news story useful.