VIDEO: “அவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே எனக்கு பிடிக்கும்” - மகாலட்சுமி ரவீந்தர் BREAKS.. EXCLUSIVE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி ஆகியோர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

VJ Mahalakshmi Opens Up Ravindar Mahalakshmi Exclusive Interview
Advertising
>
Advertising

திருப்பதியில் இவர்களின் திருமணம் நடைபெற்றிருந்த நிலையில், இது தொடர்பான புகைப்படங்களையும் அவர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தனர். ஏராளமானோர் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தற்போது ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி ஆகியோர், திருமணத்துக்கு பின்பு முதல்முறை ஜோடியாக Behindwoods சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளனர்.

VJ Mahalakshmi Opens Up Ravindar Mahalakshmi Exclusive Interview

அதில் தங்களின் திருமணம் பற்றி பேசிய ரவீந்தர்,  “நான் அவரிடம், நிறைய நேரம் எடுத்துக் கொண்டு யோசித்து சொல்லுங்கள். நான் உடம்பை குறைத்துக்க கொண்டு வந்து உங்களை திருமணம் செய்கிறேன் என கூறினேன். ஆனால், மகாலட்சுமியோ அது நடக்காது என கூறி விட்டார்” என்று குறிப்பிட்டிருந்தார். 

அவரை தொடர்ந்து இது பற்றி பேசிய மகாலட்சுமி,  “எனக்கு அவர் இப்படி இருப்பது பிரச்சனையாக தோன்றவில்லை. எனக்கே ஏதும் தோன்றாத போது, நீங்கள் ஏன் அதை நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றுதான் நான் அவரிடம் கேட்பேன். அவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே எனக்கு பிடிக்கும். அவ்வளவு தான். உடம்பை குறைப்பதற்கான முயற்சிகள் பற்றி என்னிடம் சொல்வார். நான் அப்படி எதையும் செய்து விட வேண்டாம் என்று தான் கூறுவேன். உடல் ஆரோக்கியத்தை மட்டும் பார்த்துக் கொண்டால் போதும்” என்றார்.

மேலும் பேசியவர், “இந்த விமர்சனங்கள் மற்றும் கருத்துக்களை பார்க்கும் போது, ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என்ற விஷயம் தான் அதிகமாகிறது” என்றும்,  “அதற்காக அவர்களுக்கு நன்றிகள்” என்றும் மகாலட்சுமி கூறி இருந்தார். 

இது தொடர்பான முழு வீடியோவை இணைப்பில் காணலாம். 

VIDEO: “அவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே எனக்கு பிடிக்கும்” - மகாலட்சுமி ரவீந்தர் BREAKS.. EXCLUSIVE வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

VJ Mahalakshmi Opens Up Ravindar Mahalakshmi Exclusive Interview

People looking for online information on Libra Production, Ravindar Chandrasekaran, Ravindar Mahalakshmi Exclusive, Ravindar Mahalakshmi Interview, Ravindar Mahalakshmi Marriage, Ravindar Mahalakshmi Wedding, Vj mahalakshmi will find this news story useful.