அறுவை சிகிச்சை முடிந்து வந்த VJ லோகேஷ்... உதவி செய்த நடிகருக்கு என்ன செய்திருக்கிறார் பாருங்க..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆதித்யா தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் லோகேஷ். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி - நயன்தாரா இணைந்து நடித்த நானும் ரௌடி தான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.இவர் கடந்த மார்ச் மாதம் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். நடிகர் விஜய் சேதுபதி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் மருத்துவத்திற்கும் உதவினார். நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும் அவருக்கு உதவினார்.

இதனையடுத்து முதற்கட்ட அறுவை சிகிச்சை முடிந்து உடல் நலம் தேறினார். தற்போது மெல்ல உடல் நலம் தேறினார். இந்நிலையில் அவருக்கு மேலும் ஒரு சர்ஜரி செய்யவிருப்பதாக Behindwoods-க்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருந்தார்.

தற்போது அந்த சிகிச்சையும் முடிந்து நலமுடன் இருக்கிறாராம். இதுகுறித்து நடிகை சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் லோகேஷின் அம்மாவிடம் பேசியதாகவும் அவர் நலமாக இருப்பதாகவும் ஸ்கல் மாற்று அறுவை சிகிச்சை அவருக்கு வெற்றிகரமாக நடைபெற்றதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது பரிபூரண நலம் பெற்றிருக்கும் லோகேஷ், விஜய் சேதுபதிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவரை அழைத்து அவருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். மேலும் அந்த பதிவில் கூட  "என்னை மீண்டு வரவழைத்த உங்களுக்கு நன்றி விஜய் சேதுபதி அண்ணா" என்று எழுதியுள்ளார். மேலும் அவருக்கு விஜய் சேதுபதி கேக் ஊட்டி தனது அன்பை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அறுவை சிகிச்சை முடிந்து வந்த VJ லோகேஷ்... உதவி செய்த நடிகருக்கு என்ன செய்திருக்கிறார் பாருங்க..! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vj lokesh and vijay sethupathi video viral அறுவை சிகிச்சை முடிந்து வந்த Vj லோகேஷ்

People looking for online information on Lokesh, Vijay Sethupathi will find this news story useful.