ஆஹா! VJ தீபிகா மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸுக்கு நடிக்க திரும்புவாரா? அவரே சொன்ன பதில் - வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

 பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூர்த்தி, ஜீவா, கதிர் மற்றும் கண்ணன் ஆகிய நான்கு சகோதரர்களின் கதை. பிரபல விஜய் தொலைக்காட்சியில் பார்வையாளர்களால் அதிகம் பார்க்கப்பட்ட சீரியல்களில் ஒன்றாகவும் இது திகழ்கிறது.

மேலும் இந்த சீரியல் கதாபாத்திரங்கள் ரசிகர்களுடன் நன்கு பரிட்சயமாகியுள்ளன, மேலும் இந்த சீரியல் அதிக எண்ணிக்கையிலான கூட்டு குடும்ப பிரியர்களை ஈர்த்துள்ளது. சமீபத்தில், நடிகர் சரவண விக்ரமின் (சீரியலில் கண்ணன்) திரை மனைவி வி.ஜே. தீபிகா (ஐஸ்வர்யா கதாபாத்திரம்) சீரியலில் இருந்து விலகி மற்றொரு பிரபல நடிகை சாய் காயத்ரி அவருக்குப் பதிலாக நடித்து வருகிறார்.

முகத்தில் ஏற்பட்டுள்ள தோல் பிரச்சினை காரணமாக சீரியலில் இருந்து விலகியுள்ளதாக தீபிகா அறிவித்துள்ளார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் கேட்ட மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க வருவீங்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள நடிகை தீபிகா, மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க வாய்ப்பில்லை என கூறியுள்ளார்.

தனது அடுத்தக்கட்ட ப்ராஜக்ட்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

ஆஹா! VJ தீபிகா மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸுக்கு நடிக்க திரும்புவாரா? அவரே சொன்ன பதில் - வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

VJ DEEPIKA TO RETURN TO PANDIAN STORES SERIAL

People looking for online information on Pandian stores, VJ Deepika will find this news story useful.