“என்னடா இப்படி பண்ணிருக்க?”... “இப்படி ஒரு டெடிகேஷனா?” .. நடிகரை புகழ்ந்த தீபிகா & ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர்.

VJ Deepika and fans praises Pandian Stores actors dedication

அண்ணன் - தம்பி பாசம், குடும்ப உறவுகள் ஆகியவற்றை சுற்றி நடக்கும் இந்த கதையில் கண்ணனாக நடித்து வருபவர் தான் சரவணன். அன்மையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதைப்படி பாண்டியனின் மனைவி லட்சுமி அம்மாள் இறந்துவிட்டார். இதனை தொடர்ந்து மொத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே அழும்படியான காட்சிகள் வெளியாகியிருந்தன.

VJ Deepika and fans praises Pandian Stores actors dedication

இந்த காட்சிகளில்தான் கண்ணன் கேரக்டரில் நடித்த சரவணன் தம்முடைய அபார நடிப்பை வெளிப்படுத்தியதாக ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வந்தனர். அவர் அழுது புரண்டு, தன் துக்கத்தை வெளிப்படுத்தியது மிகவும் ஒரிஜினலாக இருந்ததாக ரசிகர்கள் பலரும் குறிப்பிடுகின்றனர்.

VJ Deepika and fans praises Pandian Stores actors dedication

மேலும் இதில் தமது தாயார் கேரக்டர் இறந்ததாக காட்சிகள் வந்திருப்பதால் கண்ணன் கேரக்டரில் நடித்துவரும் சரவணன், கதைக்காக மொட்டை அடித்துள்ளார். நடிகர்கள் பலரும் செய்யத் துணியாத இந்த காரியத்தை செய்ததற்காக பலரும் நடிகர் சரவணன், நடிப்பில் அர்ப்பணிப்பு மிக்கவர் என கூறி பாராட்டி வருகின்றனர்.

ஒரு குடும்ப திரைக் கதையின் கதாபாத்திரங்கள் எந்த அளவுக்கு எமோஷனலாக உயிர் கொடுத்து நடிக்க வேண்டுமோ, அவ்வாறு இந்த சீரியலின் அனைத்து நடிகர்களும் காட்சிகளுக்கு உயிர் கொடுத்து நடிப்பதாகவும் ரசிகர்கள் இந்த சமீபத்திய காட்சிகளைப் பார்த்துவிட்டு தொடர்ச்சியாக கூறி வருகின்றனர்.

இதில் கண்ணன் எனும் கேரக்டரில் நடித்து வரும் சரவணனுக்கு மனைவியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்து வந்த விஜே தீபிகா தற்போது அந்த சீரியலில் இருந்து வெளியேறி இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்திய இந்த காட்சிகளில், சரவணனின் நடிப்பைப் பார்த்துவிட்டு - அதாவது கண்ணன் கேரக்டரின் சமீபத்திய காட்சிகளைப் பார்த்துவிட்டு புகழாரம் சூட்டி பாராட்டியிருக்கிறார்.

இதுகுறித்து விஜே தீபிகா தன் பதிவில், “டேய் நண்பா.. நிஜமாவே வேற லெவல்ல பண்ணி இருக்க.. நீ என் ஃபிரண்டுடா.. இதெல்லாம் ஆக்டிங்தான்.. இது எல்லாமே எனக்கு புரிகிறது. இருந்தாலும் இந்த ஒரு சீனை பார்க்கும்போது ரொம்பவே எமோஷனலா இருக்கு.

வேற லெவல் பண்ணிட்ட போ... முக்கியமா உன்னுடைய ஆக்டிங் செம, ஃபயரா இருந்தது” என சரவணன் குறித்து பாராட்டிப் புகழ்ந்து விஜே தீபிகா தம்முடைய பதிவினை பகிர்ந்திருக்கிறார். இந்த பதிவை பகிர்ந்துள்ள சரவணன், தம் பக்கத்தில் பகிர்ந்து நன்றி தெரிவித்திருக்கிறார்.‌

இந்த சீரியலில், விஜே தீபிகா நடித்து வந்த ஐஸ்வர்யா எனும் கேரக்டரில், அவருக்கு பதிலாக தற்போது சாய் காயத்ரி நடித்து வருகிறார். பலவிதமான எதிர்பாராத திருப்பங்களுடனும், விறுவிறுப்புடனும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.

Also Read: "ஆஹா.. இவ்ளோ பண்ணியும் இத மறந்துட்டாங்களே?".. பேசுபொருளான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலின் பரபரப்பு எபிசோடு!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

VJ Deepika and fans praises Pandian Stores actors dedication

People looking for online information on Kannan, PandianStores, Saravanan, SerialActress, Trending, TVActor, TVSerial, Vijay Television, VJDeepika will find this news story useful.