VIDEO: VJ சித்து பிறந்த நாளில் அவரது தந்தை செய்த கண்கலங்க வைக்கும் காரியம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியின் சின்னத்திரை தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலமாக நட்சத்திரமாக ஜொலித்த சித்ரா முல்லை கதாபாத்திரமாக மக்களிடையே பிரபலமடைந்தார்.

ஆனால் கடந்த டிசம்பர் 9ஆம் தேதி பரிதாபமாக மரணம் அடைந்தார்.  அவருடைய மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. பின்னர் அவரை திருமணம் செய்யவிருந்த ஹேம்நாத் அவருடைய மரணத்துக்கு தூண்டுதலாக இருப்பதாக கூறப்பட்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. பின்னர் அவர் ஜாமீன் விடுதலையானார்.

இந்த நிலையில் சித்ராவின் பெற்றோர் மிகவும் உடைந்து போயினர். எப்படியோ நாட்களை கடந்துவிட்ட நிலையில் சித்ரா நடித்த கால்ஸ் திரைப்படம் வெளியாகி அவர் வெள்ளித் திரையிலும் நடித்து இருக்கிறார் என்கிற தகவல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

இந்நிலையில் சித்ராவின் பிறந்த நாளான மே 2-ஆம் தேதி வந்தது. அதாவது நேற்றைய தினம். இதனால் தங்களுடைய இல்லத்தில் சித்ராவின் பிறந்தநாளை வருத்தத்துடன் கொண்டாடி கேக் வெட்டிய சித்ராவின் தந்தை சித்ராவின் புகைப்படத்துக்கு கேக் ஊட்டுவது போல் கண்கலங்க தொடங்கினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி காண்போர் அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தி இருக்கிறது.

ALSO READ: ரசிகர்கள் ஷாக்.. VJ பிரியங்காவுக்கு என்ன தான் ஆச்சு?..  பரவும் மருத்துவமனை படங்கள், வீடியோ!

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vj chithra father feeds cake to her photo chithu birthday video

People looking for online information on Chithra, VJ Chithu, VJChithra will find this news story useful.