பிக்பாஸின் வழக்கத்தின்படி, நிகழ்ச்சி ஆரம்பித்த இரண்டு வாரங்களில் ஒரு புதிய போட்டியாளர் உள்ளே நுழைவது வழக்கம். அந்த வகையில் போன முறை மீரா மிதுன் கலந்து கொண்டார். இந்நிலையில் இம்முறை புகழ்பெற்ற விஜே அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.ஆரம்பமே அதிரடியாக இருந்தாலும் ஒரு சிலரின் விமர்சனத்தால் அர்ச்சனா தற்போது சற்று மனதளவில் சோர்வு அடைந்துள்ளார்.
அர்ச்சனாவுக்கு அறிமுகமே தேவையில்லை. சன் டிவியில் ஒளிபரப்பான 'காமெடி டைம்' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதன்பின்பு 'இளமை புதுமை' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 2004ஆம் ஆண்டு வினித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்பு மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 'ச ரி க மா' ஷோவில் மீண்டும் வந்தார். அவரும் அவரது மகளும் சேர்ந்து தொகுத்து வழங்கிய 'சூப்பர் மாம்' என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலம். சன் டிவியில் அவர் வேலை செய்த போது வெளியான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.