தொடர்ந்து தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள், பிரபலங்கள், திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் என பலருக்கும் மர்ம நபர்கள் தவறான மெசேஜ்களை தொடர்ந்து அனுப்பி வருகின்றனர்.
இதனிடையே அண்மைக்காலமாக சென்னை தனியார் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு அளித்து வந்த பாலியல் தொல்லை விவகாரம் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது. பலரும் இதுபற்றி தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருவதுடன், தங்களுக்கு நிகழ்ந்த மோசமான அனுபவங்கள் பற்றியும் பகிர்ந்து வருகின்றனர். இன்னும் சிலர் இதுபோன்ற விவகாரங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விஜே அஞ்சனாவின் கணவர் தனது மனைவி விஜே அஞ்சனாவுக்கு வந்த ஆபாச மெசேஜ் தொடர்பான உண்மைகளை பதிவிட்டுள்ளார். பிரபல சேனல்களில் தொகுப்பாளினியாக வலம் வந்த அவ்வப்போது தமது கணவர் சந்திரனுடன் பிரபல ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொள்வது வழக்கம். எனினும் அவ்வப்போது சமூக வலைதளங்கள் மூலம் சில நிகழ்வுகளை உடனுடக்குடன் ரசிகர்களுக்கு தெரிவித்து வந்தார்.
அந்த வகையில் அஞ்சனாவின் கணவர் தற்போது ஒரு அதிர்ச்சி பதிவினை பதிவிட்டுள்ளார்.
இதனை ரி-ட்வீட் செய்த விஜே அஞ்சனா, “சில வருடங்களுக்கு முன்னர் இதே பிரச்சினையை எதிர்கொண்டேன். அந்த பிரச்சனை சைபர் குற்றவியல் பிரிவின் உதவியுடன் தீர்க்கப்பட்டது. இதேபோலான ஒரு பிரச்சனை தொடர்ந்து என்னை தொந்தரவு செய்கிறது. என்னை இயங்கவிடாமல் செய்யும் இப்படியான ஏராளமான மோசமான மெசேஜ்களை நான் பெறுகிறேன், ஆனால் இப்போது வந்திருக்கும் இந்த மெசேஜ்கள் அச்சுறுத்துகின்றன!” என குறிப்பிட்டுள்ளார்.