கயல் சந்திரனின் தந்தையும், VJ அஞ்சனாவின் மாமனாருமான சுப்ரமண்யன் மரணமடைந்துள்ளார்.
Also Read | குடும்பத்துடன் உலகத்தை சுற்றி வரும் பூஜா ஹெக்டே.. ஐரோப்பாவில் இருந்து வெளியிட்ட டூர் PHOTOS!
பிரபு சாலமன் இயக்கிய கயல் படத்தின் மூலம் அறிமுமானவர் சந்திரன். இந்த படம் அவருக்கு நல்ல அடையாளத்தை தந்தது. இப்படத்தின் பிரபலத்தால் நடிகர் சந்திரமௌலி 'கயல் சந்திரன்' என்று அழைக்கப்படுகிறார். பிரபு சாலமன் தயாரிப்பில் ரூபாய் என்ற படத்தில் நடித்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்ட்டி படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன், 2008-ல் தொலைக்காட்சி போட்டியான மிஸ் சின்னத்திரை 2008 இல் தனது அறிமுகத்தை வெளிப்படுத்தினார், அந்த போட்டியில் வெற்றியாளராக வாகை சூடினார். அவர் பின்னர் தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கி பாட்டு.காம் (2010), பாட்டு புதுசு (2011), நம்ம ஸ்டார் (2012), நட்சத்திர ஜன்னல் (2013-2017), பாக்ஸ் ஆபிஸ் (2013), கொஞ்சம் உப்பு கொஞ்சம் காரம்(2014) போன்ற வெற்றிகரமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். டான்ஸ் ஜோடி டான்ஸ் 3.0 (2014), நீங்களும் நாங்களும் (2015), கஃபே டீ ஏரியா (2016), ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் (2017), ஞாயிறு கொண்டாட்டம் (2017), ஃப்ரீயா விடு (2017) மற்றும் வாழ்த்துகள் (2018) போன்றவை இவரது ஹிட் ஷோக்கள்.
பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளினி அஞ்சனா, நடிகர் கயல் சந்திரன் இருவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு இருவீட்டார் சம்மத்துடன் திருமணம் நடைபெற்றது. அஞ்சனா-கயல் சந்திரன் தம்பதிக்கு கடந்த 2018-ல் ஜூலை மாதத்தில் ஆண் குழந்தை 'ருத்ராக்ஷ்' பிறந்தது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகர் சந்திரன் & VJ அஞ்சனா அவ்வப்போது குழந்தைகள் புகைப்படம் & போட்டோஷூட் புகைப்படங்களை பதிவேற்றுவார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் உண்டு. இந்நிலையில், நடிகர் சந்திரமௌலியின் தந்தை சுப்ரமணியன் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 73, இவரின் இறுதி சடங்கில் VJ அஞ்சனா கதறி தேம்பி தேம்பி அழுத வீடியோ தற்போது வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
Also Read | பிரபல முன்னணி நடிகையுடன் ஷாருக்கான் நடிக்கும் புதிய படம்.. ஷூட்டிங் இந்த ஊர்லயா? ஆஹா