VIDEO: “வைரமுத்து SIR-ட்ட பேசுனது இதுதான்!.. ஊரு வாயை அடைக்க முடியாது..”.. VJ அர்ச்சனா EXCLUSIVE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி ராஜா ராணி சீரியலில் அர்ச்சனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் விஜே அர்ச்சனா.‌

VJ Achana on meeting vairamuthu in shooting spot
Advertising
>
Advertising

Also Read | திடீரென தீ விபத்துக்குள்ளான நடிகை கனகா வீடு.! என்ன நடந்தது? முழு தகவல்.!

ராஜா ராணி சீரியலின் குறிப்பிட்ட அந்த குடும்பத்தின் மருமகளாக நடித்த அர்ச்சனா, தனக்கே உரிய முக பாவனைகள், உடல் மொழி மற்றும் தனித்துவமான வசன உச்சரிப்பால் பல ரசிகர்களை சம்பாதித்தார். இவர் தற்போது, ‘தம்மா துண்டு’ என்கிற தலைப்பில் உருவாகி இருக்கும் புதிய ஒரு நிமிட ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். ரதன் குமார் இசையமைத்து அர்ச்சனாவுடன் இணைந்து நடித்துள்ள இந்த பாடல் சோனி மியூசிக்கில் வெளியாகியிருக்கிறது.

VJ Achana on meeting vairamuthu in shooting spot

இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ்க்கு பேட்டியளித்துள்ள அர்ச்சனா, முன்னதாக பாடலாசிரியர் வைரமுத்துவுடனான எதேச்சையான சந்திப்பில் நடந்தவற்றை குறித்து பேசியதுடன், இது குறித்த கருத்துக்களுக்கும் பதில் அளித்துள்ளார். அதன்படி முன்னதாக ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரபல பாடலாசிரியரான வைரமுத்துவை சந்தித்ததால் நெகிழ்ந்து போன அர்ச்சனா, அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, ஷூட்டிங்கிற்கு இடையே வைரமுத்துவை சந்திக்க முடிந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இத சந்திப்பு குறித்து பிஹைண்ட்வுட்ஸில் பேசிய அர்ச்சனா, “எனக்கும் தமிழுக்குமான தொடர்பு அதிகம். எங்கள் வீட்டில் தமிழ் சார்ந்த பற்று அனைவருக்கும் உண்டு. என் தந்தை தொல்காப்பியத்தில் ஆய்வியல் நிறைஞர். எங்கள் வீட்டில் அனைவரும் வைரமுத்து சார் உட்பட அனைவரது தமிழ் சார்ந்த பாடல் வரிகளை உற்று கவனித்துக் கேட்பதுண்டு. நான் வைரமுத்து அவர்களின் நாட்படு தேறல் பாடலுக்கு மிகப்பெரிய ரசிகை. அதிலும் அந்த ஆல்பத்தில் இடம்பெற்றுள்ள, ‘நாக்கு சிவந்தவரே’ என்கிற தனி பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

இப்படி இருக்கும் நான் திடீரென வைரமுத்து அவர்களை ஷூட்டிங்கில் எதிர்பாராத விதமாக பார்த்ததும் அது ஒரு ஃபேன் கேர்ள் மொமென்ட் ஆகிவிட்டது. அதன் பிறகு என்னுடைய இயக்குனரும் ஷூட்டிங் பற்றி கூறினார். வைரமுத்து சார் இதை கேட்டுவிட்டு என்னை வாழ்த்தினார். அவ்வளவுதான் அங்கு நடந்தது. மற்றபடி இது குறித்து வந்த கமெண்ட்ஸ் பற்றி நான் பேசவில்லை. ஏதாவது ஒரு விஷயம் நடந்தால் அதைப்பற்றி எல்லாரும் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். ஊரு வாயை நம்மால் அடைக்க முடியாது.
பெரியவர்களை பார்த்தால் மரியாதை கொடுக்க வேண்டும் என்பதுதான் எனக்கு தெரிந்த விஷயம். அதையே நான் செய்தேன்” என்று கூறியுள்ளார்.

Also Read | "ஏன்னா அவர் சூப்பர் ஸ்டார்..!".. எங்கேயும் ரஜினியிஸம்..! செம ட்ரெண்டிங் வீடியோ

VIDEO: “வைரமுத்து SIR-ட்ட பேசுனது இதுதான்!.. ஊரு வாயை அடைக்க முடியாது..”.. VJ அர்ச்சனா EXCLUSIVE வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

VJ Achana on meeting vairamuthu in shooting spot

People looking for online information on Vairamuthu, VJ Achana will find this news story useful.