''மங்களம் சார் ஐ மறக்காத பாய்ஸ் பா நீ'' - விவேக் காமெடி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் விவேக் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் படம் 'வெள்ளைப் பூக்கள்'. இந்த படத்தை விவேக் இளங்கோவன் இயக்கியுள்ளார். இந்த இண்டஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் விவேக்குடன் சார்லி, பூஜா தேவரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  இந்த படத்துக்கு ராம்கோபால் கிருஷ்ணராஜூ இசையமைக்க, ஜெரால்டு பீட்டர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த படம் ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் குறித்து கருத்து தெரிவித்த சித்தார்த், விவேக் சாரின் வெள்ளைப் பூக்கள் படத்துக்கு வாழ்த்துகள். தொழில்நுட்பரீதியாக பலமாகவும் சிறந்த நடிப்பு, எழுத்து என ஒருங்கே அமைய பெற்றிருக்கிறது. இளம் குழுவுக்கு வாழத்துக்கள் என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த விவேக், வெள்ளைப் பூக்கள் படம் பற்றி உங்கள் கருத்துக்களுக்கு நன்றி சித்தார்த். மங்களம் சார் ஐ மறக்காத பாய்ஸ் பா நீ  என்று காமெடியாக தெரிவித்தார்.

Vivekh thanks to Siddharth about Vellaipookal and Remember Boys dialogue

People looking for online information on Boys, Siddharth, Vellaipookal, Vivekh will find this news story useful.