கொரோனா காரணமாக நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள இந்த வேளையில் தம் மனதுக்கு பிடித்த ராஜா சார் பாடல்களை பியானோவில் கற்றுக் கொண்டு, இசைஞானி இளையராஜாவால் பாராட்டப் பட்டுள்ளார் சின்னக்கலைவாணர் விவேக்.
தன் மகன் வாசித்த பியானோவில் இசைஞானியின் பாடல்களை, தான் வாசிக்கப் பழகியதாகவும், அதில் 'உன்னால் முடியும் தம்பி' படத்துக்காக இளையராஜா இசையில் உருவான 'இதழில் கதை எழுதும் நேரமிது...' பாடல் தனக்கு பிடித்தமான ஒன்றாக இருந்ததாகவும் இளையராஜாவுடன் உரையாடியபோது, “உங்கள் இன்ஸ்பிரேஷனில் நான் பியானோ வாசிக்க கற்றுக்கொண்டேன்” என்று சொன்னதுடன் அவர் வாசித்த 'இதழில் கதை எழுதும் நேரமிது...' காணொளியை காண்பிக்க, அதைப் பார்த்துவிட்டு ராஜா பாராட்டியுள்ளார்.
இது குறித்து மேலும் கூறும் விவேக், “இளையராஜாவுடனான உரையாடலின் போது நான் ஒரு பியானோ வாங்கி உள்ளதையும், அடுத்த சந்ததியினரும் நினைவு கூற வேண்டும் என்பதற்காக அவரது புகைப்படத்தையும் ஆட்டோகிராப்பையும் அதில் பதிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் கூறினேன். மேலும், இதனையடுத்து ராஜாவின் புதிய ஸ்டுடியோவில் அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்த விவேக், அவருக்கு நினைவுப் பரிசாக புத்தர் சிலை ஒன்றை அளித்துள்ளார்.
பின்னர் ‘இறையருள் நிறைக” என்று எழுதி தன் புகைப்படத்தில் கையெழுத்திட்டு கொடுத்துள்ளார். மேலும் “எனது பியானோவில் இசைஞானி முதன்முதலில் வாசிக்க வேண்டும் என்கிற எனது கோரிக்கைய ராஜா ஏற்று, வாசித்து என்னை ஆசிர்வதிப்பதாய் தெரிவித்துள்ளார்” என நெகிழ்கிறார் விவேக்.
ALSO READ: ஒலிம்பிக்கில் முதல் இந்திய வாள்சண்டை வீராங்கனை!.. பிரபல இயக்குநர் செய்தது என்ன தெரியுமா?