விவேக்கின் ட்வீட்டிற்கு வடிவேலுவை புகழ்ந்த ரசிகர் - அதற்கு விவேக் என்ன சொன்னார் தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸின் அச்சுறுத்தல், புயல், வெட்டுக்கிளிகளின் தாக்குதல் என நாளுக்கு நாள் இந்தியாவில் பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது.  இதனையடுத்து சமூக பிரச்சனைகளை திரைப்படங்களோடு ஒப்பிட்டு ரசிகர்கள் மீம் உருவாக்கி மகிழ்ந்து வருகின்றனர்.

Advertising
Advertising

அந்த வகையில் நடிகர் விவேக்கின் ரன் பட காமெடி ஒன்றின் ஸ்கிரீன்ஷாட் பகிர்ந்து, ''1000 வெட்டுக்கிளிய புடிச்சிட்டு வந்தா ஒரு குவாட்டர் இலவசம்னு சொல்லுங்க. ஒரே நாள்ல வெட்டுக்கிளி இனமே அழிஞ்சிடும், ஐடியா இல்லாத பசங்க'' என்று மீம் ஒன்றை உருவாக்கி ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அந்த மீம் மிகவும் வைரலானது.

அதனை பகிர்ந்த நடிகர் விவேக், ''ஒரு படத்தை வச்சிக்கிட்டு என்னவெல்லாம் சொல்றீங்க !! யாரை எல்லாம் ஓட்டுறீங்க. மீம்ஸ் பசங்க ஐடியா உள்ள பசங்க என்று கமெண்ட் செய்தார். அதற்கு பதிலளித்த ரசிகர் ஒருவர்,  'மீம் கிரியேட்டர்ஸ் தலைவர்' என வடிவேலுவை புகழ்ந்தார். அதற்கு பதிலளித்த விவேக், "உண்மை. வடிவேலுவைப் போல் மீம் கிரியேட்டர்ஸ்க்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் எவரும் இல்லை! வாழ்க அவர் நகைச்சுவைப் பணி!!" என்று புகழாரம் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vivekh Comments to fan about Vadivelu | வடிவேலு குறித்து ரசிகருக்கு கமெண்ட் செய்த விவேக்

People looking for online information on Meme, Vadivelu, Vivekh will find this news story useful.