'அப்துல் கலாமுடன் விவேக்!'.. 'நினைவுகளுக்கு அழைத்துச் செல்லும்' வைரல் புகைப்படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நகைச்சுவை நடிகர் சின்னக்கலைவாணர் விவேக் என்றாலே சிரிக்கவும் சிந்திக்கவும் கூடிய காமெடிகளை திரையில் செய்யக் கூடியவர் என்பது அனைவரும் அறிந்தது. 

திருநெல்வேலியில் பிறந்த விவேக், திருநெல்வேலி எனும் படத்தில் தான் இப்படி பகுத்தறிவு கருத்துக்களை இன்னும் தீவிரமாக பேசினார். அத்துடன் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் பேசிய விவேக், சாமி படத்தில் இதையே இன்னொரு பரிமாணத்தில் பேசினார். குறிப்பாக பொருளாதார நீதியாக வளம் கொண்டவர்கள் உழைக்கும் மக்களுக்கு உதவ முன்வரவேண்டும் என்பதை வலியுறுத்தினார்.  

ஒரு கட்டத்தில் அப்துல் கலாமுடன் விவேக்கிற்கு ஏற்பட்ட நட்பும் மரியாதையும் அவரின் சினிமாக்களில் பிரதிபலித்தன. அதே சாமி படத்தில், ‘குழந்தைகளின் கல்விதான் இந்தியாவை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் என்று கூறும் டாக்டர். அப்துல் கலாமின் புகைப்படத்தை மாட்டிவைத்துக் கொண்டு ஏழைக் குழந்தைக்கு இலவச கல்வி தர மறுக்கிறீர்களே?’ என தனியார் பள்ளி ஒன்றுடன் வாதம் செய்வார் விவேக். 

அந்த அளவுக்கு விவேக்கிடம் அப்துல் கலாமின் தாக்கம் இருந்தது. அப்படி அப்துல் கலாமிடம் இருந்து விவேக்கிற்கு ஏற்பட்ட தாக்கங்களில் முக்கியமான இன்னொன்று தான் சுற்றுச் சூழல் மேம்பாட்டுக்காக மரம் நடுதல். அந்த வகையில் விவேக் முன்னெடுத்த மரக்கன்றுகளை நடும் சேவையில் 33.5 லட்சம் மரங்களை நட்ட விவேக் 1 கோடி மரங்களை நடும் இலக்கைக் கொண்டிருந்தார்.

அத்துடன் தொடர்ந்து டெங்கு, கொரோனா, சிசிடிவி என பல்வேறு சமூக மேம்பாட்டு நலன்களிலும் அக்கறை காட்டிய விவேக், அவற்றுக்காக அரசு முன்னெடுத்த திட்டங்களுக்கு விழிப்புணர்வு செய்து மக்களிடம் சென்று சேர்த்தார். 

நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி சென்னையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பின்னர் பலரும் விவேக்கின் அரிய புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். அவ்வகையில் அப்துல் கலாமின் வழியைத் தொடர்ந்த விவேக், அப்துல் கலாமுடன் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. ஒரு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டதாக தெரிகிற அந்த புகைப்படத்தில் கலாம் சீட்டில் அமர்ந்திருக்க, விவேக் அவருக்கு அருகில் கீழே அமர்ந்தபடி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்திருக்கிறார்.

இதேபோல் அப்துல் கலாமும் விவேக்கும் மறைவுக்கு பின் சந்தித்து ஆரத்தழுவிக்கொள்வதாக ரசிகர் ஒருவர் வரைந்த டிஜிட்டல் ஆர்ட் ஒன்றும் வைரலாகி வருகிறது. 

ALSO READ: 'ராக் ஸ்டார்' அனிருத் இசை பயணத்தில் 'அடுத்த நல்ல செய்தி?'.. குஷியான ரசிகர்கள்!

தொடர்புடைய இணைப்புகள்

Vivek with abdul kalaam rare pic viral on social media

People looking for online information on Abdul Kalaam, RIPVivek, Trending, Viral, Vivek, Vivekh will find this news story useful.