நடிகர் விவேக் ஏப்ரல் 17-ஆம் தேதி மறைந்தார். அவரது மறைவு தமிழ்த் திரைத்துறைக்கு மட்டுமல்லாமல், சமூகத்துக்கும் பேரிழப்பு என்பது அனைவருடைய கருத்தாக உள்ளது.
நகைச்சுவை நடிகராக இருந்தாலும் தம்முடைய படங்களில் சமூகம் மற்றும் பகுத்தறிவுக் கருத்துக்களை பகிர்ந்து வந்துள்ளார். அப்துல் கலாம் தொடங்கிய விழிப்புணர்வை ஏற்று 33.5 லட்சம் மரக்கன்றுகளை நட்டுவந்த விவேக், தொடர்ந்து டெங்கு காய்ச்சல், சிசிடிவி கேமரா, கொரோனா பாதுகாப்பு முறைகள் என அரசு சார்ந்த பல்வேறு நலத்திட்டங்களின் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மக்களுக்காக முன்னெடுத்தார்.
இந்நிலையில் நடிகர் விவேக்கின் மறைவு அடுத்து, அவருடைய வீட்டு சமையல் பெண்மணி சாந்தி பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொள்கிறார். அதில், “விவேக் சார் ரொம்ப நல்ல மனுஷன். என் சமையல் சாருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அவரு மனைவி சமைப்பது போல் நான் சமைப்பதாக என்னிடம் கூறியிருந்தார். அவருக்கு எந்த நோயும் இல்லை. ஆக்டிவா இருந்தாங்க. வாழக்காய், சேப்பங்கிழங்கு என எல்லாமே அவருக்கு பிடிக்கும். அவருக்கு டிபன் தான் நான் செஞ்சு கொடுத்திருக்கேன். முட்டை விரும்பி சாப்டுவார். அன்னைக்கு கூட என் கையால் முட்டை வாங்கி சாப்பிட்டார். நல்லாருக்கு என்றும் கூறினார். மேம் ரொம்ப நல்லவங்க. அவங்களுக்கு தைரியம் கொடுக்கிறேன். சாரு தங்கமானவர். அதில் இருந்து நான் இன்னும் மீண்டு வரல.” என அப்பெண்மணி குறிப்பிட்டுள்ளார்.
ALSO READ: "அந்த பட டைம்ல ஒரு பொண்ண பாத்தேன்!".. ஐஸ்வர்யா ராஜேஷின் கண்கலங்க வைக்கும் பேச்சு!