தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான விவேக் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார். அவரது இழப்பு தமிழ் சினிமாவிற்கு ஈடுகட்ட முடியாத மிகப்பெரிய இழப்பாகும். திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த விவேக் சினிமா மீது கொண்ட ஈடுபாடு காரணமாக சினிமாவில் நுழைந்தார். தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜீத், விக்ரம், சூர்யா போன்ற அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். அவரது இழப்பு காரணமாக நடிகர், நடிகைகளும், பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு இரங்கல் தெரிவிக்க அவரது வீட்டை அடைந்துள்ளனர்.
தனது காமெடிகளால் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைத்த பெருமை அவருக்கு சேரும். எனவே தான் அவர் சின்ன கலைவாணர் என்று ரசிகர்களால் பெருமையுடன் அழைக்கப்பட்டார். மேலும் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது, பிலிம்பேர் விருது, தமிழ்நாடு அரசின் மாநில விருது, எடிசன் விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் புகழ்பெற்ற நடிகர் விவேக்கிற்கு தமிழக அரசு உரிய மரியாதையுடன் அவரது உடலை நல்லடக்கம் செய்ய இருக்கின்றனர்.இந்நிலையில் நடிகர் விவேக் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பு தொலைபேசி இயக்குனர் பயிற்சி மேற்கொண்டுள்ளார். இது பலருக்கும் தெரியாத விஷயம். அவருடன் அந்த கல்லூரியில் இருந்த ஒருவர் வெளியிட்டிருக்கும் பதிவில் "தோழர் விவேக் நமது துறையில் தொலைபேசி இயக்குனர் (Short duty ) ஆக பணியாற்றியவர். 81-83 கால கட்டத்தில் மதுரையில் பணி செய்தவர். நிரந்தரம் செய்யப்படுவது தாமதம் ஆனதால் தமிழக அரசு பணிக்கு மாறி கலைத் துறை பயணம் செய்து புகழ் பெற்றவர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்" என்று கூறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.