சின்னக் கலைவாணர் என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் 17ம் தேதி சனிக்கிழமை 4:30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவருடைய உயிரிழப்பு தமிழ்த் திரைத் துறைக்கு மட்டுமல்லாமல் சமூகத்துக்கும் பெரிய இழப்பு என்று அனைவரும் குறிப்பிட்டிருக்கின்றனர். பொதுமக்களிடையே நகைச்சுவை காட்சிகளில் மூடநம்பிக்கைக்கு எதிரான கருத்துக்கள் உட்பட பல சமூக கருத்துக்களை பேசிய நகைச்சுவை நடிகர் விவேக் டெங்கு காய்ச்சல், சிசிடிவி உள்ளிட்ட பல அரசு சார்ந்த முன்னெடுப்புகளுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்திருக்கிறார்.
அத்துடன் மேதகு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முன்னெடுத்த மரக்கன்று நடும் சேவையை முக்கிய இலக்காக எடுத்துக் கொண்ட நடிகர் விவேக், 33.5 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்திருக்கிறார். அவையெல்லாம் மரங்களாக ஓங்கி வளர்ந்து நிற்கின்றன. இந்தநிலையில் விவேக்கின் மறைவால் ஆழ்ந்த சோகத்தில் அவருடைய குடும்பத்தினரும் ரசிகர்களும் இருந்து வருகின்றனர்.
இதனிடையே விவேக்கின் சிறந்த நண்பரும், உடன் நடிக்கும் நடிகரும் மேனேஜருமான செல்முருகன் ‘அவரை தவிர எனக்கு வேறு யாருமில்லை’ என உருக்கமான கவிதை ஒன்றை பகிர்ந்துள்ளார்.